Featured post

Indra Movie Review

Indra Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம indra படத்தோட review அ தான் பாக்க போறோம். sabarish nanda தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இ...

Tuesday, 5 February 2019

கலை சினிமாஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பு இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கும் புதியபடம்


விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி நடிப்பில் "தாதா 87" படத்தை கலை சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

"தாதா 87" படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

தற்போது கலை சினிமாஸ் நிறுவனத்தின் இரண்டாம் படத்தின் பூஜை நேற்று (5 பிப்ரவரி) நடைபெற்றது .வல்லக்கோட்டை முருகன் கோவிலில் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை மிகவிமர்சையாக நடைபெற்றது.

இப்படத்தை  "தாதா 87" படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இயக்குகிறார். இவர் கலை சினிமாஸ் நிறுவனத்துடன் இணையும் இரண்டாவது படம் இது. 

பல புதிய பரிமாணங்களுடன் உருவாகும் இப்படம், திரையரங்கில் வெளியாகும் போது இடைவேளையின்றி திரையிடப்படும் என்றும், படத்தின் முதல் காட்சி நடுஇரவு 12 மணிக்கு திரையிடப்படும் என்றும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. 

தயாரிப்பு - கலைசெல்வன் (கலை சினிமாஸ்)
இயக்கம் - விஜய்ஸ்ரீ
ஒளிப்பதிவு - ராஜ் பாண்டி
இசை - தீபன் சக்ரவர்த்தி
படத்தொகுப்பு - நிஜந்தன் 

இப்படத்தின் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.








No comments:

Post a Comment