Featured post

டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee

 டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee’ இப்போது ஸ்ட்ரீமிங்! செய்ய்யுங...

Wednesday, 13 February 2019

துப்பாக்கி முனையில் தேசிய நெடுஞ்சாலையில் நிஜ ஆக்‌ஷன் , அலட்டிக்காத ஹீரோ..!

நடிகர் தினேஷ் நடிக்கும் "இரண்டாம் உலக்ப்போரின் கடைசி குண்டு "படத்தின் படப்பிடிப்பு சென்னை,மற்றும் புற நகர் பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான்விஜய், ஜானிஹரி, வினோத் உள்ளிட்டவர்கள் நடித்துவருகிறார்கள். 
நீலம் புரொடக்சன் பா.இரஞ்சித் தயாரிக்கிறார்.  கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை சண்டைப்பயிற்சியாளர் சாம் , மற்றும் இயக்குனர் அதியன் ஆதிரை சென்னை புற நகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் எடுத்துகொண்டிருந்தன்ர். 

நாயகன் தினேஷ் வேகமாக செல்லும் லாரியில் தொங்கிக்கொண்டு சண்டைபோடும் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தனர் குழுவினர்.  கேமரா லாரிக்குள் இருந்ததால் ரோட்டில் செல்வோருக்கு நிஜமாக ஏதோ லாரியில் நடக்கிறது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்திருக்கிறது.   அந்த நேரத்தில் அந்த வழியே வந்த ஸ்பெஷல் கமாண்டோ படை வீரர்கள் நிஜமாகவே ஹேவேஸில் லாரியில் இரவு நேரத்தில் ஏதோ நடக்கிறது என்று லாரியை சுத்தி வளைத்துப் பிடித்தனர். 

இதை அறிந்திராத நாயகன் ' நமக்குத்தெரியாமல் இது என்ன புதுசா கமாண்டோ வீரர்கள் எல்லாம் சீன்ல வராங்களே' இது சீன்லயே இல்லியே என்று அதிர்ச்சியடையாமல் சுற்றி வளைத்த போலீசார் வைத்திருந்த துப்பாக்கிகளை பார்த்து இது என்ன ஒரிஜினல் மாதிரியே இருக்கு ? என்று கேட்க .... நிஜ போலீசார் துப்பாக்கியை தினேஷ் மீது குறிவைக்க , இயக்குனர் சூட்டிங், சூட்டிங், என்று சத்தம்போட அதற்க்குபிறகே தினேஷ் அதிர்சியடைந்திருக்கிறார். நெருங்கி வந்த வீரர்கள் தினேஷ் முகத்தை கவனித்தபிறகே   நிஜமான சூட்டிங் என்று உறுதிபடுத்தியுள்ளனர். 

இதனால் சாலையில் லேசாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிளம்பும்போது நிஜமாக இருக்கிறது படப்பிடிப்பு வாழ்த்துக்கள் தினேஷ் என்று பாராட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள் கமாண்டோ படைவீரர்கள்.

கடைசிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படப்பிடிப்பு காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

No comments:

Post a Comment