Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Wednesday, 13 February 2019

பீச்சாங்கை பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த நடிகர் புதியதாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்

பீச்சாங்கை பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த  நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் தற்போது புதியதாக  ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
 
இன்னும் பெயரிடப்பாடாத இப்படம்,
 
1980 மற்றும் 1990 களில் இருந்த தெரு கூத்தை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இதில் கார்த்திக் ஜோடியாக மனிஷாஜித் நாயகியாக நடிக்கிறார். மற்றும் இயக்குநர் மாரிமுத்து, சிவசங்கர் மாஸ்டர், தவசி, நந்திதா ஜெனிபர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள், செல்வம் நம்பி இசையமைக்க , ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார், நடனம் ராதிகா மாஸ்டர்,சன்டைப்பயிற்சி வீரா,M.G.M. நிறுவனம் தயாரிக்க, இணைத்தயாரிப்பாக  ஜனா ஜாய்ஸ் முவிஸ் ஜேம்ஸ்சிவன் இணைந்து தயாரிக்க,  படத்தினை எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆதிரை.















































முதலாம் கட்டப் படபிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது  
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சிதம்பரம் அருகே உள்ள வெள்ளயங்குடி கிராமத்தில் இன்று துவக்கமாகிறது. 
இப்ப்டப்பில் 1980 களின் காலத்தை காண்பிக்கும் வகையில் பல நாடக கலைஞர்களுடன் மிக பிரமாண்டமாக அரங்கம் அமைத்து படபிடிப்பு நடைபெற உள்ளது. 

இயக்குநர் ஆதிரை கூறுகையில் கூத்து என்பது சினிமாவின் முதல்படியாகும், கலையின் ஆதி வடிவம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கலை அழிந்து கொண்டு வருகிறது.  அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூத்து நடக்கும்.  ஆனால் இந்த காலகட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் கூத்து நடப்பதே ஆச்சரியமாக இருக்கிறது, கூத்து அழிந்து விடக் கூடாது. அந்த்ஹ கலையை காப்பாற்ற வேண்டும். அதனை பதிவு செய்யும் பொருட்டே இந்த படத்தை இயக்கி வருகிறேன் என்று கூறினார்.

No comments:

Post a Comment