Featured post

Kuttram Pudhidhu Movie Review

Kuttram Pudhidhu Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kuttram pudhidhu  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். நோவா ஆம்ஸ்ட்ராங் தான் இந...

Monday, 26 February 2024

மறுவெளியீட்டில் 750 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கும் விண்ணைத்

 *மறுவெளியீட்டில் 750 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா !!*






திரை அரங்குகளில் மறு வெளியீட்டில்

அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் முதலாக ஷாருக்கானின் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" (DDLJ) அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் எனும் பெருமையை சிலம்பரசன் TR நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா சாதனை படைத்துள்ளது..


கவுதம் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR மற்றும் திரிஷா நடித்த இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் கடந்த நிலையில் இதனை ரசிகர்கள் இணையத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்..


மேலும் சென்னையில் உள்ள மல்டிபிளஸ் திரையரங்கு ஒன்றில்  750 நாட்களுக்கு மேலாக இத்திரைப்படம் ஓடி கொண்டு இருக்கிறது.. இன்றளயும் இத்திரைப்படம் இளைஞர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


#SilambarasanTR

#14YearsOfVTV

No comments:

Post a Comment