Featured post

ARC 33rd National Tenpin Bowling Championships

 ARC 33rd National Tenpin Bowling Championships  25th November – 30th November 2024 Amoeba, Church Street, Bangalore 2nd December 2024 Akaas...

Wednesday, 14 February 2024

காதலர் தினத்தன்று வெளியான 'ராமம் ராகவம்' படத்தின் சிறப்பு காட்சி

 *காதலர் தினத்தன்று வெளியான 'ராமம் ராகவம்' படத்தின் சிறப்பு காட்சி.*


சமுத்திரக்கனி நடிப்பில்

தமிழ் - தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் படம் 'ராமம் ராகவம்'

 

ப்ருத்வி போலவரபு தயாரிப்பில்  இப்படத்தை ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் கீழ் பிரபாகர் ஆரிபாகா வழங்குகிறார். 






தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ்  இந்த படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார்.



 இந்தப்படத்தில்  நடிகர் சமுத்திரக்கனி , தன்ராஜ், ஹரீஸ் உத்தமன், சுனில்  நடிக்கிறார்கள்.


காதலர் தினத்தையொட்டி, ராமம் ராகவம் படத்தின் முதல் காட்சியை சமூக வலைதளங்கள் வழியாக தெலுங்கு நடிகர்  ராம் பொதினேனி வெளியிட்டு படம் வெற்றி பெற வாழ்த்தினார். 



மேலும், பிரபல இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு பேசுகையில், 

தன்ராஜ் ஒரு நல்ல கதையை திரைப்படமாக்கியுள்ளார் . அவர் பிஸியான நடிகராக இருந்தும் இயக்குனராக தனது திறமையை  வெளிப்படுத்தியிருக்கிறார்.


தந்தைக்கும் மகனுக்கும் இடையில் உள்ள உணர்ச்சிகரமான பயணத்தை விவரிக்கும் இந்தப் படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்.  என்று வாழ்த்தினார்.



ராமம் ராகவம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், அமலாபுரம், ராஜமுந்திரி,  சென்னை ஆகிய இடங்களில்  நடைபெற்றது. 


'ராமம் ராகவம்' தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.


நடிகர்கள்- 


சமுத்திரக்கனி, தன்ராஜ் கோரனானி, ஹரிஷ் உத்தமன், சுனில்,  சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ப்ருத்விராஜ், ராக்கெட் ராகவா, ரச்சா ரவி, இந்தூரி வாசு மற்றும் பலர்.


திரைக்கதை & இயக்கம் - தன்ராஜ் கோரனானி, 


தயாரிப்பாளர்: ப்ருத்வி போலவரபு


வழங்குபவர்: பிரபாகர் ஆரிபகா


கதை- சிவபிரசாத் யானலா, 


வசனம் - மாலி

இசை - அருண் சிலுவேரு


DOP - துர்கா பிரசாத் கொல்லி, 

எடிட்டர்-  மார்த்தாண்டன் கே வெங்கடேஷ், 


கலை-  டெளலூரி நாராயணன்


பாடல்கள்-

ராமஜோகய்யா சாஸ்திரி,

No comments:

Post a Comment