Featured post

WITH THE SUPPORT OF THE GOVERNMENT OF TAMIL NADU OUR HONOURABLE CHIEF MINISTER THIRU M.K. STALIN

 *WITH THE SUPPORT OF THE GOVERNMENT OF TAMIL NADU OUR HONOURABLE CHIEF MINISTER THIRU M.K. STALIN AND HONOURABLE DEPUTY CHIEF MINISTER THIR...

Wednesday, 7 February 2024

மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா கிருஷ்ணன்

 *மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா கிருஷ்ணன் !!*



*விஸ்வம்பரா படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் !!* 


*மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV  கிரியேஷன்ஸ் இணையும் பிரம்மாண்ட திரைப்படமான விஸ்வம்பரா  படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் இணைந்துள்ளார்.*


மெகாஸ்டார் சிரஞ்சீவி  தனது அடுத்த பிரம்மாண்ட படமான “விஸ்வம்பரா” படத்திற்காக, சில நாட்களுக்கு முன்பு தான், ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த பிரம்மாண்ட படத்திற்காக ஹைதராபாத்தில் மொத்தம் 13 பிரம்மாண்ட செட்களை படக்குழு அமைத்துள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா கிருஷ்ணனை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.


நடிகை த்ரிஷா இன்று நடந்த  படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். மெகா ஸ்டார்  சிரஞ்சீவி, இயக்குநர் வசிஷ்டா மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து நடிகை திரிஷாவுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர்.  முன்னதாக நடிகை திரிஷா, மெகா ஸ்டார்  சிரஞ்சீவியுடன்  “ஸ்டாலின்” படத்தில் பணிபுரிந்துள்ளார். தற்போது மெகா மாஸ் ஃபேண்டஸி உலகை காட்டும்  “விஸ்வம்பரா” படத்தில், சிரஞ்சீவியுடனான மேஜிக் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் மீண்டும் எதிர்பார்க்கலாம்.


UV கிரியேஷன்ஸ் சார்பில் விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து  பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக உருவாகிறது. 


இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.


கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.


2025 ஆம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக ஜனவரி 10 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.


நடிப்பு : மெகா ஸ்டார் சிரஞ்சீவி


தொழில்நுட்பக் குழு: 

எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத் 

பேனர்: UV கிரியேஷன்ஸ் 

இசை: எம்.எம்.கீரவாணி 

ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு 

தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ் 

ஆடை வடிவமைப்பாளர்: சுஷ்மிதா கொனிடேலா 

எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், சந்தோஷ் காமிரெட்டி 

வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா 

பாடல் வரிகள்: ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் 

ஸ்கிரிப்ட் அசோசியேட்ஸ்: ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மதி ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா 

நிர்வாகத் தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ் 

லைன் புரடியூசர்: ராமிரெட்டி ஸ்ரீதர் ரெட்டி 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

No comments:

Post a Comment