Featured post

Kuttram Pudhidhu Movie Review

Kuttram Pudhidhu Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kuttram pudhidhu  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். நோவா ஆம்ஸ்ட்ராங் தான் இந...

Friday, 23 February 2024

தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாவது பற்றி மனம்

 *தென்னிந்திய திரையுலகில்  அறிமுகமாவது  பற்றி மனம் திறந்த  நடிகை ஜான்வி கபூர் !!*



*தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகும் ஜான்வி கபூர் !!*


திரையுலகில் அறிமுகமே தேவையில்லாத ஒரு சில நடிகைகளில் ஜான்வி கபூரும் ஒருவர்! அவரது அழகும், அசத்தும் நடிப்பும், வெள்ளித்திரையில் மேலும் மேலும் பார்க்க தூண்டும், பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வருடம் அவருக்கு மிகச்சிறப்பான வருடமாக அமைந்திருக்கிறது. ஜான்வி கபூர் நடிப்பில் அடுத்தடுத்து,  3 மிகப்பெரிய திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன.  இந்த நிலையில் நேற்று தர்மா புரடக்சனில்  ‘சன்னி சங்கரி கி துளசி குமாரி’ எனும் புதிய திரைப்படத்தையும் அறிவித்துள்ளார்.  வளரும் இளம் நட்சத்திரமாக, இளைஞர்களைக் கொள்ளைக்கொண்டு வரும் நாயகி ஜான்வி கபூர், தற்போது தென்னிந்தியாவிலும் கால் பதித்துள்ளார்.


சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நடிகை ஜான்வி கபூர், தான் தென்னிந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் தேவாரா படம் பற்றி கூறியதாவது.., 


ஒரு மிகப்பெரிய  படத்தின் ஒரு பகுதியாக  நானும் இருப்பதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் இந்த படத்தின் மூலம் நான் எனது வேர்களை நெருங்கியிருக்கிறேன். மேலும் இப்போது  தெலுங்கு மொழியையும் நான் கற்று வருகிறேன் என்று கூறியுள்ளார். 


ஜான்வி கபூரின் தாயார், பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி, ஜூனியர் என்டிஆரின் தாத்தா - என்.டி ராமாராவ் உடன் தனது தென்னிந்திய அறிமுகத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


ஶ்ரீதேவி போல ஜான்வியும் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருப்பதன் மூலம், வாழ்க்கை ஒரு முழு வட்டம் என்பது நிரூபணமாகியுள்ளது. மேலும் ஒரு சிறப்பாக நடிகை ஸ்ரீதேவியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடிகை ஜான்வி கபூர், நடிகர் ஜூனியர் என்டிஆருடன் அறிமுகமாகிறார்!  


மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி, தேவாரா, உலஜ் போன்ற பிரமாண்டமான வெளியீடுகளுடன், சன்னி சங்கிகாரி கி துளசி குமாரி என ஜான்வி கபூரின் திரைப்பட வரிசை மிகச்சிறப்பாக உள்ளது.

No comments:

Post a Comment