Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Saturday, 17 February 2024

முதல் தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின்

 முதல் தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி 2024! - மகிபால் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்


மாநில அளவிலான டென்பின் பவுலிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவருக்கு பரிசளித்த பாடகர் நிகில் மேத்யூ


தமிழ்நாடு மாநில டென்பின் பவுலிங் போட்டி 2024 - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய  சினிமா பாடகர் நிகில் மேத்யூ



சென்னையில் நடைபெற்ற ’முதல் தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி 2024’-யில் கணேஷை வீழ்த்தி மகிபால் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார்.


சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ்பவுல் மையத்தில் முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப் போட்டி பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது. இதில், இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் மஹிபால் சிங், கணேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.


இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில், இறுதிப் போட்டியில் விளையாடிய மஹிபால் முதல் ஆட்டத்தை, 68 பின்ஃபால் முன்னிலையுடன் முடித்தார். இரண்டாவது போட்டியில் மஹிபால் சிங்கின் கடுமையான போட்டியை தாக்குபிடிக்க முடியாமல் கணேஷ் என்.டி-சமாளிக்க முடியாமல் திணறினார். இதனைத் தொடர்ந்து, இறுதியில் மஹிபால் சிங் இரண்டு போட்டிகளிகளும் வெற்றி பெற்று, 55 பின்ஃபால்கள் (443-388) முன்னிலை பெற்றார்.


முந்தைய நாள், முதல் அரையிறுதியில் இரண்டு போட்டிகளில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடப்பட்டது. முதல் நிலை வீரரான மஹிபால் சிங், நான்காம் நிலை வீரரான பார்த்திபன்.ஜே (403-361) 2 வது நாக் அவுட்டில் தோற்கடித்தார். 42 பின்ஃபால் வித்தியாசத்தில் இரண்டாவது அறையிறுதியில் இரண்டாம் நிலை வீரரான கணேஷ் என்.டி-யை தோற்கடித்தார். மூன்றாம் நிலை வீரர் ஆனந்த் பாபு (418-382) 36 பின்ஃபால் வித்தியாசத்தில் தனது இடத்தை உறுதி செய்தார்.


18 போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் முதல் 4 பவுலர்கள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறினார்கள். முதல் இருந்து களம் இறங்கிய மகிபால் சிங் 18 போட்டிகளில் 211.50 சராசரியுடன் முடித்தார். அதைத் தொடர்ந்து கணேஷ் என்.டி (207.28), ஆனந்த் பாபு (199.400) மற்றும் பார்த்திபன்.ஜெ (196.72)


சிறப்பு பரிசுகள்:


6 கேம் பிளாக்குகளில் அதிகபட்ச சராசரி : மஹிபால் சிங் (228.67)

18 போட்டிகளுக்குப் பிறகு அதிகபட்ச சராசரி : மஹிபால் சிங் (211.50)


போட்டியின் நிறைவில், வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் நிகில் மேத்யூ சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

No comments:

Post a Comment