Featured post

Sudhan Sundaram’s Passion Studios presents, Siddharth-Raashi Khanna starrer “Rowdy & Co” Teaser Poster Concept surprises K-Town

 *Sudhan Sundaram’s Passion Studios presents, Siddharth-Raashi Khanna starrer “Rowdy & Co” Teaser Poster Concept surprises K-Town* Passi...

Tuesday, 27 February 2024

90களின் மாணவர் உலகத்தை கண் முன் நிறுத்திய இன்னொரு

 *“90களின் மாணவர் உலகத்தை கண் முன் நிறுத்திய இன்னொரு '96'” ; பிரபலங்களின் பாராட்டு மழையில் ‘நினைவெல்லாம் நீயடா’* 


‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘நினைவெல்லாம் நீயடா.  


இசைஞானி இளையராஜா இசையமைத்த 1417வது படம் என்கிற பெருமையுடன் அழகான காதல் காவியமாக வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ளார். மனீஷா யாதவ், யுவலட்சுமி மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்க  இன்னொரு நாயகனாக ரோஹித் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா,  இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 


பள்ளிக்கால நினைவுகளை மையப்படுத்தி வெளியாகும் படங்கள் எல்லாமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று விடுவதில்லை.. ஆனால் ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தை ரசிகர்களின் மனதை தொடும் விதமாக சரியான கலவையாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆதிராஜன்.


இந்தநிலையில் சமீபத்தில் இப்படத்தின் சிறப்புக்காட்சியை இயக்குநர் கதிர், நடிகர் சம்பத்ராம் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டுகளித்தனர். 


இயக்குநர் கதிர் கூறும்போது, “ரொம்ப நாளைக்கு பிறகு ரசித்து பார்த்த படம். பள்ளிக்கூட காட்சிகள் ரசிக்கும் விதமாக இருக்கின்றன” என பாராட்டினார்.


நடிகர் சம்பத்ராம் கூறும்போது, “90களின் மாணவர்கள் காலகட்டத்தை நம் கண் முன் நிறுத்தி உள்ளார்கள். 96 படம் போலவே இன்னொரு விதமாக இந்தப்படம் நம்மை கவர்கிறது” என சிலாகித்துள்ளார்..


படம் பார்த்த பலரும் இப்படத்தில் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக படமக்கப்பட்டிருப்பதாக பாராட்டி வருகிறார்கள்.


லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு ‘நினைவெல்லாம் நீயடா' படத்தை தயாரித்துள்ளார்.


 

No comments:

Post a Comment