Featured post

Sudhan Sundaram’s Passion Studios presents, Siddharth-Raashi Khanna starrer “Rowdy & Co” Teaser Poster Concept surprises K-Town

 *Sudhan Sundaram’s Passion Studios presents, Siddharth-Raashi Khanna starrer “Rowdy & Co” Teaser Poster Concept surprises K-Town* Passi...

Tuesday, 13 February 2024

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் கௌரி கான் தயாரிப்பில்

 ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் கௌரி கான் தயாரிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில், கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘ஜவான்’ திரைப்படம், ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா (ASTRA)விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட, ஒரே இந்தியத் திரைப்படம் எனும் பெருமையை பெற்றுள்ளது.


இயக்குநர் அட்லீ இயக்கத்தில்  ஷாருக் கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படத்தை, கௌரி கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

ஜவான் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரா விருதுகளில், சிறந்த திரைப்படப் பிரிவில் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட ஒரே திரைப்படம் இதுவென்பது, குறிப்பிடத்தக்கது.  உலகின் பல நாடுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட பல சிறந்த படங்களான அனாடமி ஆஃப் எ ஃபால் (பிரான்ஸ்), கான்க்ரீட் உட்டோபியா (தென் கொரியா), ஃபாலன் லீவ்ஸ் (பின்லாந்து) ஃபெர்ஃபெக்ட் டேஸ் (ஜப்பான்), ரேடிகல் (மெக்சிகோ), சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ (ஸ்பெயின்), தி டேஸ்ட் ஆஃப் திங்ஸ் (பிரான்ஸ்), தி டீச்சர்ஸ் லவுஞ்ச் (ஜெர்மனி) மற்றும் தி சோன் ஆஃப் இன்ரஸ்ட் (யுனைடெட் கிங்டம்) போன்ற மிகச்சிறந்த 500 படங்களில், கலந்துகொண்ட ஒரே இந்தியப்படம் ஜவான் ஆகும்.


ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா விருதுகளில் இயக்குநர் அட்லீ இந்தியா நாட்டினை  பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ஜவான் படம் உலகளவில் பிரபலமான பார்பி, ஓப்பன்ஹைமர், கில்லர் ஆஃப் தி ஃப்ளவர் மூன், ஜான் விக், ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் மற்றும் பல பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் பட்டியலிலும் இணைந்துள்ளது.

ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் அஸ்ட்ரா விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை, கௌரி கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வழங்க, ஷாருக் கானின் நடிப்பில், அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் பெற்றுள்ளது.



No comments:

Post a Comment