Featured post

Soodhu Kavvum 2 Movie Review

 Soodhu Kavvum part 2 Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ஒரு interesting ஆனா அதே சமயம் காமெடி ஆனா படத்தோட review அ தான் பாக்க போறோம். ...

Wednesday, 21 February 2024

மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மை

 மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம்  'நாதுராம் கோட்சே.'













'கிடுகு' படத்தின் இயக்குனரின் அடுத்த படைப்பு 'நாதுராம் கோட்சே.'


ராமலட்சுமி புரொடக்சன் மற்றும் ஈஞ்ச நாடு 18 பட்டி கணேஷ் நாகா புரொடக்சன், சிவன் OTT ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'நாதுராம் கோட்சே.'


இந்த படத்தில் சசி, ரவி, தாமரை, பீட்டர் சரவணன், இன்பா, சிவகுமார், வடிவேல் மகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.


கிடுகு படத்திற்கு இசையமைத்த ஜெர்சன் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு - JK & Team

எடிட்டிங் - விக்னேஷ்

கலை - திலக்

சவுண்ட்  - சந்தோஷ்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் - வீரமுருகன்.

இதற்கு முன்பு இவர் இயக்கிய 'கிடுகு' திரைப்படம் தற்போது நடக்கும் அரசியல் பற்றிய பல உண்மைச் சம்பவங்களை வைத்து எடுத்திருந்தார். அந்த படம் அரசியல் கட்சிகளிடையே பெரிய சர்ச்சைகளை உருவாக்கியது.

திரையங்குகளில் வெளியிட விடாமல் அரசியல் செய்தார்கள். அதனால் தாமரை youtube சேனலில் வெளியிடப்பட்டு பல மில்லியன் பார்வையாளர்களை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது  'நாதுராம் கோட்சே' படம் பற்றி இயக்குநர் வீரமுருகன் பகிர்ந்தவை...


''மகாத்மா காந்தியின் மரணத்தில்  மறைக்கப்பட்ட சம்பவங்களை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.


கோட்சே காந்தியை சுட்டது இரண்டு புல்லட். ஆனால் அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்டது நான்கு புல்லட். இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை இதில் சொல்கிறோம்.


தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை ஆரம்பிக்கும் போது 42000 திருக்கோவில்கள் இருந்தன. ஆனால், இப்போது 22000 கோவில்கள் தான் இருக்கின்றன. இதன் மூலம் அழிக்கப்பட்ட கோவில்களின் உண்மை வரலாறு மட்டுமின்றி . இந்து, முஸ்லீம் பிரிவினையை தூண்டுவது அரசியல்வாதிகள் தான் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம். 


இப்படி பல உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாகியுள்ள இந்த படம் மார்ச் 07 ஆம் தேதி சிவன் OTT, பரமசிவன் OTT என்று புதிய OTT தளங்களில் வெளியாகவுள்ளது

No comments:

Post a Comment