மலையாளத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் வசனம் எழுதி வரும் எழுத்தாளர் சுமேஷ் ட்ரன் முதன்முறையாக மலையாளம் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனராக அறிமுகம் திரைப்படம் தீரா வன்மம்,
ஷில்பகலா ப்ரொடக்ஷன் சார்பில் பி மது தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நாயகர்களாக புதுமுகங்கள் சிபு , தினேஷ் மற்றும் அஜித் நடிக்கிறார்கள் நாயகிகளாக மீனாட்சி, லட்சுமி, சோனா ஆகியோர் நடிக்கிறார்கள்...
இப்படத்திற்கு
இசை பீட்டர், ஒளிப்பதிவு சிபு ரவீந்திரன்,
படத்தொகுப்பு ராஜேஷ்
இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்,
இது ஒரு சைக்கோ திரில்லர் வகை படம்
நாஞ்சி எனும் செவிலியர் பெண்ணுக்கு மாடல் துறையில் மிகவும் பிரபலமான பெண்ணி எனும் ஆண் அறிமுகம் ஆகிறார்... அவர்களின் நட்பு வளர்ந்து காதலாக மாறுகிறது, அதே நேரத்தில் அவர்களின் குடியிருப்பு அருகே பல்வேறு மரணங்கள் நடைபெறுகிறது இதை யார் செய்தார் எதற்காக செய்தார் என்பதை திரில்லர் ஜானரில் சொல்ல வருகிறோம் என்றார் இயக்குனர்
இதன் முதல் கட்ட படபிடிப்பு பெங்களூரில் நடந்து முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவில் நடைபெற உள்ளது. இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது..
No comments:
Post a Comment