Featured post

Power Star Pawan Kalyan’s Epic Period Action Film Hari Hara Veera Mallu Part-1

 Power Star Pawan Kalyan’s Epic Period Action Film Hari Hara Veera Mallu Part-1: Sword vs Spirit Enters Final Leg of Shooting Power Star Paw...

Friday, 29 November 2024

Sorgavaasal Movie Review

Sorgavaasal Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம rj balaji நடிப்பு ல வெளி வந்த சொர்க்கவாசல் படத்தை பத்தி தான் பாக்க போறோம். இந்த படத்தோட review அ வ பாக்கறதுக்கு முன்னாடி ஒரு சில interesting ஆனா news அ பாத்துருளாம். இந்த படத்தோட teaser launch க்கு டைரக்டர் லோகேஷ் கனகராஜ் யும் மியூசிக் டைரக்டர் அனிருத் யும் வந்திருந்தாங்க. இந்த படத்தோட கதைக்களமே jail அ பத்தி இருக்கறதுனால லோகேஷ் க்கு இந்த படத்தை பாக்கறதுக்கு ஆர்வம் வந்துடுச்சு னு தான் சொல்ல்லனும். இந்த படத்தோட premier show வ பாத்த logesh kaithi 2 படத்துல ஒரு சில scenes அ மாத்திருக்கிறாரா. இந்த படத்தோட ott rights அ netflix தான் வாங்கிருக்காங்க. 

Click here for Sorgavaasal Video Review: https://www.youtube.com/watch?v=fyQFiGc-EUA

Sidharth Vishwanath தான் இந்த படத்தை எழுதி direct பண்ணிருக்காரு. இவருக்கு இது தான் முதல் படமும் கூட. இதுக்கு முன்னாடி kaala,  kabali படத்துல work பண்ணிருக்காரு. இதுல rj balaji , selvaraghavan , natty Karunaas, Saniya Iyappan, Sharaf-U-Dheen, Hakkim Shah, Balaji Sakthivel, Anthonythasan, Ravi Raghavendra, and Samuel Robinson.னு பல பேரு நடிச்சிருக்காங்க. 

இந்த படத்துக்கு A Certificate அ குடுத்திருக்காங்க. நம்ம trailer ல இருந்தே தெரிஜுக்கலாம் jail ல இருந்துகிட்டு ஒரு gang தப்பான வேலைய பாத்துட்டு இருக்காங்க. இதுல மாட்டிக்கிறாரு RJ பாலாஜி. இன்னும் சொல்ல போன 1999 ல central prison ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். 




இந்த படத்தோட trailer ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் மக்கள் கிட்ட பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு. ஏன்னா நம்ம ususal அ பாக்கற rj balaji விட இதுல different அ இருக்காரு. ஒரு jail ல எப்படி அப்பாவியான ஒருத்த மாட்டிகிட்டு இருக்கான் ன்றதா தான் இதுல சொல்ல வராங்க.

வாங்க இந்த படத்தோட கதைக்கு போய்டலாம். ஒரு சின்ன சாப்பாட்டு கடைய வச்சு நடத்திட்டு இருக்காரு பார்த்திபன் அ நடிச்சிருக்க RJ balaji . இவரு ஒரு பெரிய போலீஸ் officer அ கொலை பண்ணிட்டாரு னு இவரு மேல case அ போட்டு jail க்குள தள்ளிடுறாங்க. அங்க jail அ full control ல வச்சுட்டு இருக்காரு siga வ  நடிச்சிருக்காங்க selvaraghavan ன்ற ஒரு பெரிய rowdy.  இவருக்கு left அண்ட் right hand அ வேலை பாக்குறது Kendrick யும் tiger mani ன்ற இன்னொரு ரவுடி யும் தான். இங்க வந்து மாட்டிக்கற பார்த்திபன் இங்க நடக்கற பிரச்சனைகளை அவரால சந்திக்க முடியல. இங்க இருக்கற போலீஸ் யும்  warden யும் இவரை கைக்குள்ள போட்டுட்டு siga வ அழிக்கணும் னு பாக்குறாரு. இந்த மாதிரி ஒரு பக்கம் வில்லன் கிட்டயும் police கிட்டயும் பார்த்திபன் மாட்டிட்டு முளிக்குறாரு. கடைசில இதுல இருந்து தப்பிச்சாரா இல்லையா ன்றது தான் இந்த சொர்கவாசல். 


இந்த கதையா 1999 ல சென்ட்ரல் prison ல நடந்த gangster Boxer Vadivelu ஓட மரணத்துல அங்க இருந்த கைதிகள் எல்லாம் police அ தாக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதை base பண்ணி தான் இந்த கதையா எடுத்திருக்காங்க. சோ எல்லா ஆசைகளையும் இருக்கற ஒரு சாதாரண ஆளு எப்படி இந்த jail ல வந்து மாட்டி கடைசில ஜெயிக்கறான் ன்றது தான். 


இது வரைக்கும் வந்த படங்களை jail scenes ரொம்ப கம்மியா இருக்கும் ஆனா இந்த கதை முழுசா jail ல தான் நடக்குது. jail ல நடக்கற கொடுமையான விஷயங்களை இதுல காமிச்சிருக்காங்க. அங்க இருக்கற கைதிகள் ஓட power அ பொறுத்து அங்க நடக்கற கொடுமைகள், ஒழுங்கா நடந்துகிறவங்கள jail ல சமைக்க வைக்கிறது னு ஒரு prison ஓட reality அ காமிச்சருக்காங்க. அது மட்டும் கிடையாது அங்க இருக்கற ஓவுவுறு கைதிகள் க்கும் ஒரு story இருக்கிறது பாக்கறதுக்கு ரொம்ப interesting அ இருக்கு. 


இதுல நடிச்சிருக்க actors ஓட performance யும் ரொம்ப அருமையா இருந்துச்சு. RJ பாலாஜி அவரோட காமெடி part அ விட்டுட்டு இவ்ளோ serious அ பண்ணிருக்கறது, ஒரு சாதாரண ஆள எல்லாத்தயும் இளந்துட்டு, தேவையில்லாத விஷயத்தை தன்னோட கைல எடுக்கிறது னு அவரோட character அ ரொம்ப அழகா build பண்ணிருக்காங்க. selvaraghavan siga வ செமயா அசத்திருக்காரு னு தான் சொல்லணும். ஒரு gangster அ அங்க இருக்கற ஆட்களை பயப்படுத்தி வச்ருக்கறது னு ரொம்ப மிரட்டலா இருக்காரு. 


கதையா ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் எங்கயும் சிதறம டைரக்டர் எடுத்துட்டு போன விதம் நல்ல இருந்தது.  இந்த படத்துல வர fight scenes தான் வேற level ல இருந்தது. இந்த மாதிரி heavy ஆனா scenes க்கு BGM அ இருக்கட்டும் இல்ல music அ இருக்கட்டும் எல்லாமே செமயா குடுத்திருக்காங்க. என்ன தான் இந்த படத்துல அவ்ளோ songs இல்லனாலும் songs miss  ஆகுது ன்ற feel அ இந்த படம் கொடுக்கல னு தான் சொல்லணும். 


இந்த படத்தோட technical side யும் அவங்க best அ குடுத்திருக்காங்க. மொத்தத்துல ஒரு thrilling ஆனா action படத்தை பாக்க miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment