Featured post

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது mu...

Thursday, 21 November 2024

நடிகர் வருண் தவான் நடித்துள்ள 'பேபி ஜான்' படத்தின் முதல்

 *நடிகர் வருண் தவான் நடித்துள்ள 'பேபி ஜான்' படத்தின் முதல் பாடலான 'நைன் மடாக்கா', குளோபல் சென்சேஷன்ஸ் தில்ஜித் தோசன்ஜ் மற்றும் தீ குரலில் நவம்பர் 25 அன்று வெளியாகிறது!*



'பேபி ஜான்' படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. படத்தின் முதல் பாடலான ’நைன் மடாக்கா’ பாடல் நவம்பர் 25, 2024 அன்று வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. 


முராத் கெடானி, ப்ரியா அட்லீ மற்றும் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் ‘பேபி ஜான்’ படத்தைத் தயாரித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான 'நைன் மடாக்கா' நிச்சயம் டான்ஸ் ஆந்தமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இர்ஷாத் கமில் எழுதிய இந்தப் பாடலுக்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். உலகப்புகழ் பெற்ற பாடகர்களான தில்ஜித் தோசன்ஜ் மற்றும் தீக்ஷிதா வெங்கடேசன் என்கிற தீ ஆகிய இருவரும் முதல்முறையாக இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர். 


வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு இடையேயான கெமிஸ்ட்ரியை வெளிக்கொண்டு வரும் வகையில் அதிரடி பெப்பி பாடலாக இது இருக்கும். தில்ஜித்தின் வைப்ரண்ட் குரலும் தீயின் மாயாஜால குரலும் நிச்சயம் பாடலை ஹிட்டாக்கி விடும். அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய பாடகிகள் குரல் மற்றும் இசையமைப்பாளர்களில் தீயும் ஒருவர். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இப்போது, இசையும் படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. 


வருண் தவான், ஜாக்கி ஷெராஃப், வாமிகா கபி, மற்றும் இந்தியில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அட்லீ மற்றும் சினி1 ஸ்டுடியோஸுடன் இணைந்து ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் ’பேபி ஜான்’ படத்தை, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. படம் டிசம்பர் 25, 2024 அன்று வெளியாகிறது.

No comments:

Post a Comment