Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Friday, 29 November 2024

Parachute Movie Review

Parachute Movie REview

 ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம வீடியோ ல parachute ன்ற webseries ஓட review தான் பாக்க போறோம். Rasu Ranjith டைரக்ட் பண்ண இந்த series ல Shakthi Rithvik, Iyal, Krishna, Kani Thiru, Shaam, and Sharanya Ramachandran நடிச்சிருக்காங்க.    இந்த series ஓட கதையை பாத்தோம்னா shanmugam gas cylinder அ டெலிவரி பண்ணற ஏஜென்ட் அ வேலை பாத்துட்டு இருக்காரு. இவங்க wife லட்சுமி housewife அ இருக்காங்க. இவங்களுக்கு rudhra னு 7 வயசு பொண்ணும்  varun னு 11 வயசு பையனும் இருக்காங்க. என்னதான் shanmugam க்கு கொறஞ்ச சம்பளம் வந்தாலும் தன்னோட பசங்கள பெரிய ஸ்கூல் க்கு அனுப்பி படிக்க வைக்குறாரு. ஆனா family கிட்ட வரும் போது பசங்ககிட்ட ரொம்ப strict அ இருக்காரு. varun  தப்பு பண்ண உடனே அடிச்சிடுவாரு. அப்போ தான் rudhra ஓட bday க்கு இந்த ரெண்டு பசங்களும் அப்பா ஓட வண்டிய எடுத்துட்டு ஊற சுத்துறாங்க. இந்த bike ஓட பேரு தான் parachute . ஆனா அந்த வண்டி இவங்க கைய விட்டு போயிடுது இந்த பசங்களும் காணாம போயிடுறாங்க. இதுக்கு அப்புறம் இந்த பசங்களுக்கு என்ன ஆச்சு, இவங்களோட அப்பா அம்மா ரெண்டு பேரும் என்ன பண்ண போறாங்க, அந்த bike என்னாச்சு னு இவங்க  சந்திக்கிற விஷயங்கள் தான் இந்த series ஓட கதை னே சொல்லலாம். 

Click to Watch Parachute Movie exclusive Review: 

https://www.youtube.com/watch?v=PsxbDSWm_Ks

இந்த கதையை பாக்கும் போது சின்ன பசங்களும் அவங்களோட thoughts அ சொல்றத தான் இந்த series அமைச்சிருக்கு. சின்ன பசங்களுக்கு அடம்பிடிக்கற குணமும் அதுனால அவங்களுக்கு ஏற்படுற விளைவுகளை பத்தி சொல்லிருக்காங்க . சின்ன பசங்களோட எண்ணங்கள் எப்படி இருக்கும், அவங்க ஏங்கற ஒரு சில விஷயங்கள் னு இப்படி சின்ன பசங்கள சுத்தியும் அவங்களோட அந்த சின்ன உலகத்தை பத்தி அழகா எடுத்து சொல்றது தான் இந்த parachute னே சொல்லலாம். கதை கேட்டுக்கும் போது ரொம்ப சாதாரணமா இருந்தாலும் இதுல சொல்ல வர விஷயங்கள் எல்லாமே யோசிக்க வைக்குது. 







ஒரு சின்ன பசங்க எதார்த்தமா எப்படி இருப்பாங்களோ அப்படி தான் இதுலயும் காமிச்சிருக்காங்க. வீட்ல இருக்கிறதா உடைக்கறதா இருக்கட்டும், சேட்டை பண்ணறத இருக்கட்டும், rudhra நல்ல படிக்கிற கொழந்தையா அதே சமயம் இவளோட அண்ணா வருண் ரொம்ப கம்மி mark எடுக்கும் போது rudhra  சோகமா இருக்கிறதா இருக்கட்டும், அப்பா கிட்ட report card ல sign வாங்கும் போது வர பயம் னு நம்ம பாக்குற எல்லாம் scenes யும் நம்மால relate பண்ணிக்க முடியும். என்னதான் shanmugam ரொம்ப strict அ இருந்தாலும் ஒரு சில விஷயம் அவரோட பசங்க முன்னாடி பண்ண மாட்டாரு. உதாரணத்துக்கு அவரு drinks பண்றதெல்லாம் வீட்ல மறைமுகமா தான் பண்ணுவாரு. ஒரு typical ஆனா குடும்பத்துல அம்மா எப்படி சாதுவா அப்பா ரொம்ப strict அ இருப்பாங்களோ அதே மாதிரி தான் இங்கேயும் இருக்காங்க. 

இந்த பசங்க அவங்க அப்பாவோட bike அ எடுத்துட்டு வெளில போகும் போது தான் பிரச்சனையே ஆரம்பிக்குது. இதை பத்தி police

கிட்ட complaint குடுக்கும் போது இனொரு case

ஓட சேந்து போயிடுது. kiruba ன்ற போலீஸ் officer கிட்ட தான் இந்த கொழந்தைகளை கண்டுபிடிக்கறதுக்கும் இந்த bike அ கண்டுபிடிக்குறதுக்கான case வரும். ஒரு level க்கு அப்புறம் kiruba க்கு shanmugam ஓட character

பத்தி தெரியுது. அப்போ தாங்க இங்க ஒரு dialogue சொல்லுறாரு. பசங்கள அடிச்ச திருந்திடுவாங்க னா அப்போ police ஓட அடி க்கும் எல்லாரும் திருந்திருக்கணுமே னு சொல்லுவாரு. இது தான் நம்மால யோசிக்க வைக்குது. வீட்ல பசங்கள ரொம்ப அடிச்சு வலத்தை இல்ல அவங்களுக்கு குடுக்க வேண்டிய கவனத்தை குடுக்காம எப்பவுமே திட்டுகிட்டு இருந்த அவங்களோட குணம் எப்படி இருக்கும் னு இதுல சொல்லிருக்காங்க. 

கதை ரொம்ப சின்னதா இருந்தாலும் இதுல நடிச்சிருக்க actors தான் இந்த கதையை அழகா கொண்டு வந்திருக்காங்க னே சொல்லலாம். Krishna, Kishore, and Kani ,  Kaali Venkat and Baava Chelladurai லாம் அவங்க நடிப்பை அழகா பதிவு பண்ணிருக்காங்க. இருந்தாலும் rudhra அப்புறம் varun அ நடிச்சிருக்க Iyal and Shakti க்கு தான் நம்ம கை தட்டி ஆகணும். ஒரு சின்ன பசங்க எப்படி இருப்பாங்க,  என்ன பண்ணுவாங்க ன்ற எதிர்த்தமான situation அ இவங்களுக்கு குடுத்து அழகா அவங்க  innocent ஆவும் charming ஆவும் நடிச்சிருக்காங்க னே சொல்லலாம். 

என்ன தான் நெறய series ott ல வந்தாலும் ஒரு குடும்பம் பாக்கற மாதிரி பசங்களோட reality

அ காமிக்கிற  ஒரு அருமையான படைப்பு னு தான் சொல்லணும். அதிகமா நம்மக்கு advice பண்ணாம பசங்களுக்கும் சேரி parents க்கும் சேரி நெறய விஷயங்களை யோசிக்க வைக்கிறதா இருக்கு. ஒரு நல்ல parenting எப்படி இருக்கணும், சின்ன பசங்களோட உலகம் இப்படி தான் அதா புரிஞ்சு நடந்துக்கிட்ட அதா விட வேற எதுவும் கிடையாது ன்ற ஒரு நல்ல message ஓட இதை முடிக்கறாங்க. கண்டிப்பா இதை குடும்பத்தோட பாக்க வேண்டிய ஒரு செரிஸ் . கண்டிப்பா இதை miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment