Featured post

Lokah Chapter 1 Chandra.Movie review

 Lokah  Chapter 1 Chandra. Movie review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம lokah   chapter 1 chandra.  இந்த படத்தை இயக்கி இருக்கறது dominic arun.  இ...

Wednesday, 16 July 2025

முதலாளித்துவத்திற்கு எதிரான படம் " சென்ட்ரல் " ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.

 முதலாளித்துவத்திற்கு எதிரான படம் " சென்ட்ரல் " ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.










ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் " சென்ட்ரல் " 



உழைப்பிற்கு சாதி,மதம்,இனம் மொழி கிடையாது என்ற உயரிய கருத்தை சொல்லும் படம்                          " சென்ட்ரல் "


சென்னை மாநகருக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது       " சென்ட்ரல் " என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. 


ஸ்ரீரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.


காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமான காக்கா முட்டை விக்னேஷ் இந்த படத்தின் கதையின் நாயாகனாக நடித்துள்ளார்.


கதையின் நாயகியாக சோனேஸ்வரி நடித்துள்ளார். 


இயக்குனர் பேரரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மற்றும் சித்தா தர்ஷன், ஆறு பாலா, மேதகு ராஜா, அன்பு ராணி, கவிநிலவன், ஓம் கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.


காடப்புறா கலைக்குழு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த  வினோத் காந்தி இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இசை - இலா

எடிட்டிங் - விது ஜீவா

கலை இயக்கம் - சேது ரமேஷ் 

சண்டை பயிற்சி- ஜான் மார்க் 

சவுண்ட் டிசைனர் - வசந்த்

இணை இயக்குனர் -  கண்ணன், ராஜா சுந்தர் 

மேக்கப் - கயல்

ஆடை வடிவமைப்பு - செல்வராஜ்

டி ஐ  - கெட் இன் ட்ரீம்ஸ் ஸ்டியோஸ்

ஸ்டில்ஸ் -  கதிர்  

விளம்பர வடிவமைப்பு  - அதின் ஒல்லூர்.

மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்.

தயாரிப்பு மேற்பார்வை -  சிவகுமார்

தயாரிப்பு நிறுவனம் - ஸ்ரீ ரங்கநாதர் மூவி மேக்கர்ஸ்.

தயாரிப்பாளர்கள் - வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம்.


கதை திரைக்கதை வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் - பாரதி சிவலிங்கம்.


படம் பற்றி இயக்குனர் பாரதி சிவலிங்கம் நம்மிடையே பகிர்ந்தவை...


இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம். உழைப்பாளர்களுக்கு சாதி மதம் மொழி இனம் எதுவும் கிடையாது அனைவரும் ஒன்றுதான் என்ற கருத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.


உலகம் வளர்ச்சி அடைய தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இன்று வரை நாம் பயன்படுத்தும் அனைத்தும் உழைப்பாளர்களால் கிடைத்தவைதான் அவர்கள் இல்லாது இந்த முன்னேற்றங்கள் சாத்தியமில்லை ஆனால் அப்பேர்பட்ட  உழைப்பாளிகள் முதலாளித்துவம் என்ற பெயரில் எப்படியான இன்னல்களை சந்திக்கின்றனர் என்பதையும் சொல்கிறேன்.

அப்படி ஒரு குக்கிராமத்திலிருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக  சென்னை சென்ட்ரலுக்கு வேலைக்கு வரும் நாயகன் முதலாளித்துவம் என்ற பெயரால் என்ன மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்கிறான் அதிலிருந்து எப்படி மீண்டான் என்பதை உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கிறோம் என்றார் இயக்குனர் பாரதி சிவலிங்கம்.


சென்ட்ரல் ரயில் நிலையம் எப்படி சென்னைவாசிகள் மற்றும் தமிழகமெங்கும் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறதோ அதேபோல் இந்த படமும் மக்கள் மனதில் இருந்து நீங்காத இடம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment