*கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உண்மைக்கு நெருக்கத்தில் தயாராகும் புதிய படம்*
*சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கே.எஸ்.அதியமான் இயக்கும் உணர்வுப்பூர்வமான படம்*
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது.
‘ உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இயக்குநர் கே.எஸ்.அதியமான் இந்தப் படத்தை இயக்குகிறார்.
மிகச்சிறந்த நடிப்பால் படத்திற்கு உயிரூட்டும் நடிகை ரேவதி இந்தப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர் விதார்த், லிஜோ மோல் ஜோஸ், அர்த்தனா பினு என பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில், சஞ்சித், அபிராமி என்கிற இளம் ஜோடியும் அறிமுகமாகின்றனர். இயக்குநர்கள் ராஜ்கபூர் மற்றும், மகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலயா இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் கே.எஸ்.அதியமான் கூறும்போது,
“ஒரு அம்மா – பையன், ஒரு கணவன் - மனைவி, ஒரு காதல் இவற்றை சுற்றி நடக்கின்ற உண்மைக்கு நெருக்கமான கதை இது.. அனைவராலும் உணர்ப்பூர்வமாக இந்த கதையை தங்களுடன் தொடர்பு படுத்தி பார்த்துக்கொள்ள முடியும். என்னுடைய படங்கள் எல்லாமே உண்மைக்கு மிக நெருக்கமாகத்தான் இருந்திருக்கின்றன. இந்த கதை உண்மையாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார்.
*தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்*
தயாரிப்பு: வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்
இணை தயாரிப்பு : வேலாயுதம்
இசை ; டி.இமான்
ஒளிப்பதிவு ; கவியரசு
படத்தொகுப்பு ; சுதர்ஷன்
பாடல்கள் ; சினேகன்
கலை ; சிவா யாதவ்
மக்கள் தொடர்பு ; A.ஜான்
No comments:
Post a Comment