Featured post

*G. Devarajan Master Award 2026 - First Edition*

 *G. Devarajan Master Award 2026 - First Edition* The “G. Devarajan Master Award 2026” - the first award will be presented to renowned India...

Thursday, 17 July 2025

பாரட்டுக்களைக் குவித்த “மனிதர்கள்” திரைப்படம், சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா

 *பாரட்டுக்களைக் குவித்த “மனிதர்கள்”  திரைப்படம்,   சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகி வருகிறது !!*



புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில், மனித குணத்தின் விசித்திரங்களை அழுத்தமாக பேசி, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்த “மனிதர்கள்” திரைப்படம்,  ஜுலை 17  இன்று  முதல், சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது.


Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர்  இராம் இந்திரா  இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், உருவான “மனிதர்கள்” திரைப்படம், கடந்த மே மாதம் 30 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியானது. 


ஒரு இரவில் ஒன்று சேர்ந்து, மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், வித்தியாசமான களத்தில் அசத்தலான திரில்லராக, சொன்ன இப்படம், திரை ஆர்வலர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. 


தற்போது இப்படம்  சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா என இரண்டு ஓடிடி தளங்களில்,  ஸ்ட்ரீமாகி வருகிறது. இப்படத்தினை திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்கள், இப்போது வீட்டிலிருந்தே பார்த்து ரசிக்கலாம். 


இப்படத்தினை Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures சார்பில் இராஜேந்திர பிரசாத், ஜெ.நவீன் குமார், மு.கி.சாம்பசிவம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.  


இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


தொழில் நுட்ப குழுவில்  ஒளிப்பதிவு - அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ், இசை - அனிலேஷ் எல் மேத்யூ , படத்தொகுப்பு - தின்சா, கலை - மகேந்திரன் பாண்டியன், பாடல் - கார்த்திக் நேத்தா, ஒப்பனை - அ சபரி கிரிசன், துனைத்தயாரிப்பு - தரணிதரன் பரிமளா குலோத்துங்கன், நா யுவராஜ், உதவி இயக்கம் - லோகேஷ் க கண்ணன், சண்டை பயிற்சி - வின் வீரா, ஒளிக்கலவை - ஆனந்த் இராமச்சந்திரன்,

சப்தம் - சதீஷ், வண்ணம் - வசந்த் செ கார்த்திக், வரைகலை - ஆன்டனி பிரிட்டோ, விளம்பர வடிவமைப்பு  - ரிவர் சைடு ஹவுஸ்  மக்கள் தொடர்பு : AIM சதீஷ், சிவா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


அருமையான திரை அனுபவமான "மனிதரகள்' திரைப்படத்தை, சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் கண்டு ரசியுங்கள் !.


https://www.sunnxt.com/movie/detail/227466


https://www.aha.video/movie/manidhargal

No comments:

Post a Comment