*கலிபோர்னியாவில் வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் (FeTNA) அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக திரையிடப்பட்ட ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் சிறப்பு காட்சி*
ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தத் இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.. கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் சிறப்பு திரையிடல் காட்சி அமெரிக்காவின் வட கலிபோர்னியாவில் உள்ள ராலேவில் வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திரையிடப்பட்டது. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 5000 தமிழர்கள் இதில் கலந்துகொண்டடனர்.
பன் பட்டர் ஜாம் திரைப்படத்தின் டிரைலரை முதல் நாளே பார்த்து ரசித்தனர். இரண்டாவது நாள் இந்த சிறப்பு காட்சியை காண முன்பதிவுக்காக வாயிலில் மக்கள் கூட்டம் நெருக்கியடித்து கொண்டிருந்த நிலையில் அதற்கான முன்பதிவு விரைவாக நிறைவடைந்தது.
திரையரங்குகளில் நிறைந்திருந்த பார்வையாளர்கள் உற்சாக மிகுதியுடன் படத்தை ரசித்து சிரித்து பார்த்து மகிழ்ந்தனர்.. இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியன் இந்த நிகழ்வின் போது பார்வையாளர்களை நேரில் சந்தித்து உரையாடியதுடன், அமெரிக்காவில் இருந்துகொண்டே சென்னையில் இந்த படத்தை எப்படி தயாரித்தோம் என்பது குறித்த அவர்களது கேள்விகளுக்கும் பதில் அளித்தார்,
*வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA) பற்றி*
வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA) என்பது அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள தமிழ் அமைப்புகளின் ஒரு இலாப நோக்கற்ற கூட்டமைப்பாகும்... இது பதிவுசெய்யப்பட்ட, இலாப நோக்கற்ற,, வரி விலக்கு பெற்ற அமைப்பாகும். இது 1987 ஆம் ஆண்டு டெலாவேர் பள்ளத்தாக்கின் தமிழ் சங்கம், வாஷிங்டன் & பால்டிமோர் தமிழ் சங்கம், நியூயார்க் தமிழ் சங்கம், இலங்கை தமிழ் சங்கம் மற்றும் ஹாரிஸ்பர்க் தமிழ் சங்கம் என ஐந்து தமிழ் அமைப்புகளால் நிறுவப்பட்டது.:. 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 71 தமிழ் அமைப்புகளை வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA) பிரதிநிதித்துவப்படுத்துகிறது..
No comments:
Post a Comment