Featured post

Lokah Chapter 1 Chandra.Movie review

 Lokah  Chapter 1 Chandra. Movie review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம lokah   chapter 1 chandra.  இந்த படத்தை இயக்கி இருக்கறது dominic arun.  இ...

Wednesday, 16 July 2025

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா

 *திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி* 


*திங்க் ஸ்டுடியோஸ் நெக்ஸ்ட் x #கவின் 09 படத்தின் தொடக்க விழா*


*ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படத்தில் இணையும் கவின் - பிரியங்கா மோகன்*


திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 


இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில கவின்-  பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.  இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார் . ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை  திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார். 


மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்களும், ்படப்பிடிப்பு குறித்த தகவலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.


ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் கவின் மற்றும் பிரியங்கா மோகன் முதன்முறையாக இணைந்திருப்பதால்.. இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment