Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Saturday, 19 July 2025

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து

 *நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!*



லெஜண்ட்ரி இயக்குநர் ஜோஷி அடுத்து ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை உன்னி முகுந்தன்  ஃபிலிம்ஸ் (UMF) மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா  பேனரின் கீழ்  இயக்க இருக்கிறார்.

இந்த அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களாக ஹிட் படங்களை பல ஜானரில் கொடுத்து வருபவர் இயக்குநர் ஜோஷி. 


தேசிய விருது வென்ற 'மேப்படியான்' மற்றும் ரூ. 100 கோடி வசூலித்த ஆக்‌ஷன் திரைப்படமான 'மார்கோ' என மலையாள சினிமாவின் வணிகத்துக்கு புதுவரையறை கொடுத்ததை அடுத்து இயக்குநர் ஜோஷியுடன் இணைவதன் மூலம் UMF  தனது தரத்தை மேலும் மேம்படுத்துகிறது.


'பொரிஞ்சு மரியம் ஜோஷ்', 'கிங் ஆஃப் கொத்தா' போன்ற படங்களில் தனது வலுவான கதாபாத்திர வரையறை மற்றும் திரைக்கதைக்காக அறியப்பட்ட எழுத்தாளர்- இயக்குநர் அபிலாஷ் என். சந்திரன், இயக்குநர் ஜோஷியுடன் இந்தப் படத்தில் இணைகிறார். இதன் மூலம் இயக்குநர் ஜோஷியின் புதிய படம் வெறும் ஆக்‌ஷன் மட்டுமல்லாது ஆழமான எமோஷன், மறக்க முடியாத தருணங்களையும் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுக்கிறது. 


இதற்கு முன்பு பார்த்திராத வகையில் உன்னி முகுந்தன் ஆக்‌ஷன் அவதாரத்தில் நடிக்கிறார். குடும்ப பார்வையாளர்கள் மற்றும் இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் படங்கள் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது UMF. 


மலையாள சினிமாவில் தரமான படம் தயாரித்து வரும் நிறுவனங்களில் ஐன்ஸ்டீன் மீடியாவும் ஒன்று. தரமான, பரிசிதனை முயற்சிகளை தைரியமாக கொடுக்கும் ஐன்ஸ்டீன் மீடியாவின் சமீபத்திய படம் 'ஆண்டனி'. டார்க் ஹியூமர், வித்தியாசமான கதை சொல்லலுக்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'புருஷ பிரேதம்' திரைப்படத்தையும் தயாரித்தது. தரமான கதைகள், உயர்தரமான தயாரிப்பு என்ற உயர்நோக்கத்துடன் ஐன்ஸ்டீன் மீடியா அடுத்தடுத்து படங்கள் தயாரித்து வருகிறது. 


UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் புதுவித சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுக்க இருக்கிறது.

No comments:

Post a Comment