Bobby Touch தயாரிப்பு நிறுவனம் கடந்த செப்டம்பர் 2024 அன்று போடப்பட்ட ஒப்பந்ததின் படி அந்த தயாரிப்பு நிறுவனம் அக்டோபர் 2024 தயாரிப்பு பணிகளை தொடங்கியிருக்க வேண்டும்.
இதற்காக நடிகர் ரவி மோகனிடம் இந்நிறுவனத்திற்கு 80 நாட்கள் ' கால் சீட்' ஒதுக்கப்பட்டிருந்தது, ஆனால் இந்த தயாரிப்பு நிறுவனம் படம் துவங்குவதற்காக எந்த ஒரு ஏற்பாடுகளும் செய்யாமல் இந்த படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட டைரக்டருக்கும் பணம் செலுத்தாமல் அவரை அழகழித்துக்கொண்டே இருந்தது. இவ்வாறான சூழ்நிலையில் நடிகர் ரவி மோகன் பலமுறை இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டபொழுதும் தொடர்ந்து இந்த நிறுவனம் மௌனம் காத்து வந்த நிலையில் இறுதியாக இந்த படத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். இம்மனுவில் மேலும் கூறியதாவது இந்த தயாரிப்பு நிறுவனம் இது போன்று படங்களை தயாரிக்காமல் மோசடி செய்து பல்வேறு செயல்களில் ஈடுபடுவதால் நடிகர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. ஆகவே நடிகர் ரவி மோகன் அவர்கள் Bobby Touch நிறுவனத்திடம் ரூபாய் ஒன்பது கோடி நஷ்டஈடாக கோரப்பட்டு இந்த நிறுவனம் வேறு எந்த தயாரிப்புகளிலும் ஈடுபட்டால் அதை விற்கவோ வெளியிடவோ தடை விதிக்க கோரி மனு தாக்கல்.
No comments:
Post a Comment