Featured post

First Look of Kiara Advani as ‘Nadia’ Unveiled from Yash’s ‘Toxic: A Fairytale for Grown-Ups

 First Look of Kiara Advani as ‘Nadia’ Unveiled from Yash’s ‘Toxic: A Fairytale for Grown-Ups’* One of the most anticipated films of 2026, R...

Thursday, 17 July 2025

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ், சரிகம‌ வழங்கும் பிரபல இசைக் கலைஞர் ஹிமேஷ்

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ், சரிகம‌ வழங்கும் பிரபல இசைக் கலைஞர் ஹிமேஷ் ரேஷம்மியா பங்குபெறும் துடிப்பான‌ இசை நிகழ்ச்சி*





*சென்னை நேரு விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது*


இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.


ரசிகர்களின் பேராதரவு பெற்று சாதனை படைத்த 'யுவன் 360', 'சோனு நிகம் லைவ்', 'விஜய் ஆண்டனி 3.0', 'டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்', உள்ளிட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து, பிரபல இசைக் கலைஞர் ஹிமேஷ் ரேஷம்மியா சென்னையில் முழுக்க பங்குபெறும் நிகழ்ச்சியை நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் முன்னணி இசை நிறுவனமான சரிகம உடன் இணைந்து வழங்க உள்ளது.


பாலிவுட்டில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள ஹிமேஷ் ரேஷம்மியா, தமிழில் கமல் ஹாசன் நடித்த 'தசவாதாரம்' வெற்றிப் படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. 


'ஹிமேஷ் ரேஷமிய்யா கேப்மேனியா டூர்' என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 16 சனிக்கிழமை மாலை ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது, இதற்கான நுழைவுச் சீட்டுகள் புக் மை ஷோ இணையதளம் மற்றும் செயலியில் கிடைக்கும்.


இசை ரசிகர்களின் இதயத்துடிப்பை புரிந்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை சிறப்பாக திட்டமிட்டு அரங்கேற்றி வரும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தினர், பிரபல பாலிவுட் இசைக் கலைஞர் ஹிமேஷ் ரேஷமிய்யா சென்னையில் பங்கு பெறும் இசை நிகழ்ச்சியை சரிகம உடன் இணைந்து நடத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து பேசிய ஹிமேஷ் ரேஷமிய்யா, "இசைக்கு இன்றியமையாத இடம் கொடுத்துள்ள சென்னை ரசிகர்களை நேரில் சந்திப்பதற்கு காத்திருக்கிறேன். ஆகஸ்ட் 16 அன்று உங்கள் முன் இசைக்க‌ ஆவலாக உள்ளேன்," என்றார்.


'ஹிமேஷ் ரேஷமிய்யா கேப்மேனியா டூர்' நிகழ்ச்சியில் ஹிமேஷ் ரேஷமிய்யா உடன் இணைந்து பிரபல பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் பங்கேற்று மெல்லிசை மற்றும் துள்ளலிசை பாடல்களை ரசிகர்களுக்காக மேடையில் இசைப்பார்கள்.


***


*

No comments:

Post a Comment