Featured post

Lokah Chapter 1 Chandra.Movie review

 Lokah  Chapter 1 Chandra. Movie review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம lokah   chapter 1 chandra.  இந்த படத்தை இயக்கி இருக்கறது dominic arun.  இ...

Wednesday, 16 July 2025

ஊர்வசி – ஜோஜு ஜார்ஜ் இணைந்து நடிக்க, ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய

 *ஊர்வசி – ஜோஜு ஜார்ஜ் இணைந்து நடிக்க,   ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் – “ஆஷா” திரைப்படம், இன்று பூஜையுடன், படப்பிடிப்பு துவக்கம்!*




மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படமான “ஆஷா” படத்தின் பூஜை, திருகக்கரையில்  உள்ள வாமன மூர்த்தி கோவிலில்  இன்று விமரிசையாக நடைபெற்றது.  பூஜையைத் தொடர்ந்து, படக்குழு இன்று படப்பிடிப்பை துவங்கியுள்ளது.


இந்த விழாவில், ஜோஜு ஜார்ஜ் உடன் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் மற்றும் இயக்குநர் சஃபர் சனல் விளக்கேற்றி படத்தை துவக்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து படத்தின் ஜோஜு ஜார்ஜ் கிளாப் அடிக்க, மது நீலகண்டன் கேமரா  ஸ்விட்ச் ஆன் செய்து படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.


இப்படத்தில் ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, விஜயராகவன், ஐஸ்வர்யா லட்சுமி, மற்றும் “பனி” திரைப்படத்தில் நடித்த ரமேஷ் கிரிஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரு பான்-இந்தியப் படமாக உருவாகும் இப்படம்  ஐந்து இந்திய மொழிகளில்  வெளியிடப்படவுள்ளது.


படத்தின் டைட்டில் லுக் போஸ்டர், பூஜை நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


இப்படத்தை அஜித் வினாயகா ஃபிலிம்ஸ் சார்பில் வினாயகா அஜித் தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை எழுதியுள்ள சஃபர் சனல் இப்படம் மூலம்  இயக்குநராக அறிமுகமாகிறார். திரைக்கதை மற்றும் வசனங்களை ஜோஜு ஜார்ஜ், ரமேஷ் கிரிஜா, மற்றும் சஃபர் சனல் இணைந்து எழுதியுள்ளனர்.


தொழில்நுட்பக் குழு விவரங்கள்:

ஒளிப்பதிவு: மது நீலகண்டன்

எடிட்டிங்: ஷான் முகமது

இசை: மிதுன் முகுந்தன்

ஒலி வடிவமைப்பு & சிங் சவுண்ட்: அஜயன் அடாட்

ஆர்ட் இயக்கம்: விவேக் கலாத்தில்

மேக்கப்: ஷமீர் ஷம்ஸ்

உடை வடிவமைப்பு: சுஜித் சி.எஸ்

ஸ்டண்ட்ஸ்: தினேஷ் சுப்பராயன்

தயாரிப்பு மேலாளர்: ஷபீர் மலவட்டம்

சீனியர் அசோஷியேட் இயக்குநர்: ரதீஷ் பிள்ளை அசோசியேட்ஸ்: ஜிஜோ ஜோஸ், ஃபெபின் எம். சன்னி

ஸ்டில்ஸ்: அனூப் சக்கோ

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

பப்ளிசிட்டி டிசைன் : யெல்லோ டூத்

No comments:

Post a Comment