*வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!*
~ T. ராஜா வேல் இயக்கத்தில், S. விஜயபிரகாஷ் தயாரிப்பில் SK Productions சார்பில் உருவான ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தில், தர்ஷன் – ஆர்ஷா சாந்தினி பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 19 முதல் ZEE5 தமிழ் ஓடிடியில் ஸ்ட்ரீமாகிறது ~
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி வெளியீடாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “ஹவுஸ் மேட்” தமிழ் திரைப்படத்தை வெளியிடவுள்ளது. ஹாரர், ஃபாண்டஸி மற்றும் காமெடி ஆகிய மூன்று ஜானர்களையும் கலந்த இந்தப் படம், இயக்குநராக T. ராஜா வேலின் அறிமுக படமாகும். S. விஜயபிரகாஷ் தயாரிப்பில், ல் SK Productions சார்பாக உருவாகியுள்ளது. தர்ஷன் – ஆர்ஷா சாந்தினி பைஜு ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், தீனா, அப்தூல் லீ மற்றும் மாஸ்டர் ஹெண்ட்ரிக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரேமம், நேரம் படங்களின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். “ஹவுஸ் மேட்ஸ்” திரைப்படம் வரும் செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது
கார்த்திக் (தர்ஷன்) – அனு (ஆர்ஷா சந்தினி பைஜு) என்ற புதிதாகத் திருமணமான தம்பதியினர் ஒரு புதிய அபார்ட்மெண்டுக்கு குடிபெயர்கிறார்கள். ஆனால் அங்கு நடக்கும் அசாதாரண சம்பவங்கள், வேறு ஒரு குடும்பம் வாழும் மாறுபட்ட காலவரிசை (different timeline) சம்பந்தப்பட்டவை என அவர்கள் அறிகிறார்கள். சாதாரணமாகத் தொடங்கும் இந்த குடும்பக் கதை, பின்னர் சஸ்பென்ஸ், அமானுஷ்யம், நகைச்சுவை, உணர்ச்சி ஆகியவை கலந்த வித்தியாசமான ஃபேண்டஸி கதையாக மாறுகிறது.
இயக்குநர் T. ராஜாவேல் கூறியதாவது:
“ஹவுஸ் மேட்ஸ்” என் கனவுத்திரைப்படம். சுவாரஸ்யமாக அமானுஷ்ய அம்சங்கள் இருக்கும் அதே நேரத்தில், நகைச்சுவை, உணர்ச்சிகளோடு பார்வையாளர்களைத் தொடர்புபடுத்தும் வகையில் கதை அமைக்க விரும்பினேன். இத்தனை அர்ப்பணிப்புள்ள நடிகர், தொழில்நுட்பக் குழுவோடு பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. எங்கள் படத்தை உலகம் முழுவதும் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் மேடை வழங்கிய ZEE5-க்கு என் நன்றிகள்.”
நடிகர் தர்ஷன் கூறியதாவது..,
“ஹவுஸ் மேட்ஸ் எனது முந்தைய திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. இது வினோதமாகவும், வேடிக்கையாகவும், உணர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. கார்த்திக் வேடத்தில் நடித்தது காமெடியையும் பயத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் சவாலான அனுபவமாக இருந்தது. எங்கள் படத்தை உலகம் முழுவதும் ZEE5-ல் பார்வையாளர்கள் பார்க்கப்போகிறார்கள் என்பது பெரும் சந்தோஷம்.”
ZEE5-ல்! ஹவுஸ் மேட்ஸ் டிஜிட்டல் பிரீமியர் – செப்டம்பர் 19 காணத்தவறாதீர்கள் !!
Trailer Link 🔗
No comments:
Post a Comment