Featured post

டிட்வா புயல் மழையில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நடைபாதை வியாபாரிகளுக்கு, மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

 *டிட்வா புயல் மழையில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நடைபாதை வியாபாரிகளுக்கு, மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி முன்னுதாரணமான பி டி செல்வகுமா...

Tuesday, 23 September 2025

பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய அச்சு ஊடக, காட்சி ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

 பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய அச்சு ஊடக, காட்சி ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.



திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா என்கிற அளவுக்கு மாபெரும் வெற்றி படைப்பாக,


மக்களையும் திரைப்பட ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருக்கிற *படையாண்ட மாவீரா* திரைப்படத்தின் விமர்சனங்கள் திறனாய்வுகள் அனைத்திலும் எனது வசனத்தை குறிப்பிட்டு பாராட்டுகிற உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி


திரையரங்குகளில் எல்லாம் மக்கள் பேராதரவை தந்து கொண்டிருக்கிறார்கள்..


பல இடங்களில் உற்சாகமாக கைத்தட்டி ஆரவாரம் செய்து வரவேற்று வாழ்த்துகிறார்கள்.


தமிழர்கள்,மற்றும்

திரைக்கலை ரசிகர்கள்  அனைவருக்குமான 

இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மகத்தான பணியை செய்யும் உங்கள் அனைவருக்கும் *படையாண்ட மாவீரா* வசனகர்த்தா ஆகிய எனது சார்பிலும்  படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் சார்பிலும் மனம் நிறைந்த நன்றி.


அன்புடன் 

பாலமுரளி வர்மன்

No comments:

Post a Comment