Padai Yaanda Maa Veera Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம படையாண்ட மாவீரா படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது வா கவுதமன். இந்த படத்துல வா கவுதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி , ‘தலைவாசல்’ விஜய், சாய் தீனா னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் sep 19 அன்னிக்கு release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்போம்.
இது ஒரு உண்மை சம்பவத்தை base பண்ணி எடுத்த கதை னே சொல்லலாம். dr ramadas அவர்களுடைய கட்சி யான பாட்டாளி மக்கள் கட்சி ல இருந்த ஒருத்தர் தான் காடுவெட்டி குரு. இவரோட வாழக்கை கதை தான் இந்த திரைப்படம். இவரோட ஆரம்ப கட்டத்துல dmk கட்சி ல தான் சேர்ந்தரு. ஆனா ஒரு சில காரணத்துனால பாட்டாளி மக்கள் கட்சி ல சேந்து அதுல ஒரு முக்கியமான பிரமுகர் ஆவும் இருந்தாரு. இந்த படத்தோட கதை அறியலுர் மாவட்டத்துல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. அந்த ஊர் ல ஒரு பிரபலமான corporate company ஒரு தொழிற்சாலையை அமைக்கணும் னு முடிவு பண்ணுறாங்க. இதை அமைக்கிறதுக்கு இந்த corporate காரங்க ஊர் ல இருக்கற மக்கள் ஓட இடத்தை அபகரிக்கறாங்க. இதை தடுத்து நிறுத்தி மக்கள் க்கு நியாயம் கிடைக்கணும் ண்றதுக்காக போராடுறாரு இந்த காடுவெட்டி குரு. இவரு எப்படி மக்கள் க்கு help பண்ணாரு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
காடுவெட்டி குரு வா நடிச்சிருக்காரு gowthaman . இவரோட acting ரொம்ப emotional அ இருந்தது னே சொல்லலாம். ஒரு பக்கம் மக்களுக்காக government அ எதிர்த்து நிக்குறதும் இன்னொரு பக்கம் தப்பு பண்ணறவங்களுக்கு தண்டனை வாங்கி குடுக்கறது னு ஒரு super ஆனா performance அ தான் குடுத்திருக்காரு. kaduvetti guru அவர்கள் வன்னியர் சங்கத்துல சேர்ந்து அதோட தலைவர் ஆவும் சில வருஷம் இருந்தாரு. அதுனால இந்த படத்துல ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பத்தி அதிகமா சொல்லிருக்காங்க னே சொல்லலாம். யாரை இருந்தாலும் எல்லாரும் ஒன்னு தான் ன்ற விஷயத்தை தான் இந்த படத்துல ரொம்ப அழகா கொண்டு வந்திருக்காங்க. heroine அ poojita நடிச்சிருக்காங்க. இவங்க ஒரு சில scenes க்கு வந்தாலும் ஒரு natural ஆனா performance அ வெளி படுத்தி இருக்காங்க. gowthaman ஓட அப்பாவா சமுத்திரக்கனியும் அம்மாவா saranya பொன்வண்ணனும் நடிச்சிருக்காங்க. gowthaman ஓட group ஒரு அங்கமா இருக்காங்க mansoor alikhan யும் redin kingsley யும். மத்த supporting actors எல்லாரும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு super அ நடிச்சிருக்காங்க.
கோபி ஜெகதீஸ்வரன் ஓட cinematography bright ஆவும் sharp ஆவும் இருக்கு. கவிஞர் வைரமுத்து வரிகள் ல Gv prakash ஓட music ல வர எல்லா songs இந்த கதைக்கு அழகா பொருந்தி இருந்தது னு தான் சொல்லணும். Sam cs ஓட bgm , இந்த படத்துல வர intense ஆனா scenes அ ஒரு படி மேல எடுத்துட்டு போயிருக்கு.
சோ மறக்காம இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து மிஸ் பண்ணாம theatre ல போய் பாருங்க.
No comments:
Post a Comment