Featured post

பாட்ஷா '- 'பறந்து போ'- 'டூரிஸ்ட் ஃபேமிலி' - படங்களுக்கு வழங்கப்பட்ட 7 ஸ்டார் விருது 2025

 *'பாட்ஷா '- 'பறந்து போ'-  'டூரிஸ்ட் ஃபேமிலி' -  படங்களுக்கு வழங்கப்பட்ட 7 ஸ்டார் விருது 2025* தமிழ் திரையுலகில் முத...

Wednesday, 17 September 2025

கண்ணா ரவி நாயகனாக நடிக்கும், “வேடுவன்”, ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ்

 *கண்ணா ரவி நாயகனாக நடிக்கும், “வேடுவன்”, ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் அக்டோபர் 10 ஆம் தேதி முதல்  ஸ்ட்ரீமாகிறது!*



இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  நடிகர் கண்ணா ரவி முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ், வலுவான உணர்ச்சி பூர்வமான கதை சொல்லலையும், ஆழமான நடிப்பையும் இணைக்கும் சக்திவாய்ந்த டிராமாவாக உருவாகியுள்ளது.


மண் சார்ந்த பாரம்பரியக்  கதைகளை தைரியமாக சொல்லும் முயற்சியில் தொடர்ந்து முன்னோடியாக பணியாற்றி வரும் ZEE5, வேடுவன் மூலம் அத்தகைய முயற்சியை மீண்டும் மேற்கொண்டுள்ளது. பல அடுக்குகள் கொண்ட மனித உணர்வுகள், எது சரி, எது தவறு என்பதிலான சிக்கல்கள், கடமைக்காக தரப்படும் தனிப்பட்ட விலை போன்ற அம்சங்களை பிரதிபலிக்கும் இந்த சீரிஸ், ஒரு சாதாரண டிராமா மட்டுமல்ல, வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளும் அதன் விளைவுகளையும் ஆழமாக சித்தரிக்கும் ஒரு புது அனுபவமாக இருக்கும்.


“வேடுவன்” சீரிஸ் பற்றி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட கண்ணா ரவி கூறுகையில்.., 

“வேடுவன் கதை சொன்ன அந்த நொடியிலேயே இது எனக்கு மிக முக்கியமான படைப்பாக இருக்குமெனத் தோன்றியது. இது ஒரே ஒரு மனிதனின் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல, அவன் எடுக்கும் முடிவுகள், அதன் விளைவுகள், சரி-தவறு இடையேயான மெல்லிய கோடு ஆகியவற்றை ஆராயும் பயணமும்கூட. நடிகராக, இந்த பாத்திரம் என்னை என் கம்ஃபர்ட் ஸோனுக்கு வெளியே கொண்டு சென்று, கதாபாத்திரத்தில் முழுமையாக வாழ வைத்தது. வெடுவன் ஒரு சீரிஸ் மட்டும் அல்ல,  நீண்ட நாட்கள் மனதில் நிற்கும் ஒரு அனுபவமாக இருக்கும்.”


“வேடுவன்” சீரிஸை வரும் அக்டோபர் 10 முதல்,   உங்கள் ZEE5 இல் கண்டுகளியுங்கள் !


Link 🔗https://www.youtube.com/watch?v=RM-Lio9i7ag

No comments:

Post a Comment