காட்சி முதல் வெற்றி வரை: சக்தி ஃபிலிம் பேக்டரியுடன் ‘காந்தி கண்ணாடி’ வெற்றிக்கொண்டாட்டம்
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’. செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியான இந்த படம், சுவாரஸ்யமான உள்ளடக்கம், இயல்பான நடிப்பு மற்றும் ஆழமான உணர்வுகளுக்காக பாராட்டுகளையும் பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்த வெற்றியை நினைவுகூரும் வகையில், படத்தின் விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி பி.சக்திவேலன் அவர்கள், தனது அலுவலகத்தில் ‘காந்தி கண்ணாடி’ படக்குழுவினரை அழைத்து சிறப்பு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தார். அந்நிகழ்வு, நன்றியும் மகிழ்ச்சியும் நிரம்பிய நினைவுகூரும் விழாவாக அமைந்தது.
தயாரிப்பாளர் ஜெய் கிரண் கூறுகையில்:
“காந்தி கண்ணாடி தயாரித்த அனுபவம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இப்போது மக்களிடம் இருந்து இவ்வளவு அன்பும் பாராட்டும் கிடைப்பது, உண்மையான கதை எப்போதும் மனங்களைத் தொட்டே தீரும் என்பதை நிரூபிக்கிறது” என்றார்.
இயக்குநர் ஷெரீஃப், தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் மீது தனது நன்றியைத் தெரிவித்தார்.
கே.பி.வை பாலா மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி முன்னணி வேடத்தில் நடித்தத்துள்ள இப்படத்தில், பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா ஆகியோரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. மேலும், விவேக்–மெர்வின் (இசை), பாலாஜி கே.ராஜா (ஒளிப்பதிவு), சிவானந்தீஸ்வரன் (எடிட்டிங்) ஆகியோரின் தொழில்நுட்ப திறமைகள் படத்திற்கு வலுசேர்த்துள்ளன.
வசீகரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள மூத்த நடிகை அர்ச்சனாவின் பங்களிப்பு படத்துக்கு பெரும் உணர்ச்சி ஆழத்தை சேர்த்துள்ளது. விழாவில் தனது பாராட்டுகளைத் தெரிவித்த அவர், இன்றைய பார்வையாளர்களுடன் ஆழமாக இணைக்கும் படத்தில் பங்கேற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்வில் பேசுகையில், சக்தி ஃபிலிம் பேக்டரி பி.சக்திவேலன் அவர்கள்:
“சக்தி ஃபிலிம் பேக்டரியில் நாங்கள் எப்போதும் கருத்துகள் நிறைந்த சினிமாவையே ஆதரிக்கிறோம். அது மக்களை மகிழ்விப்பதோடு, மனதில் நீண்டகாலம் நிற்கும். காந்தி கண்ணாடி அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு” என்றார்.
இவ்விழா, படத்தின் வசூல் வெற்றியை மட்டுமின்றி, உள்ளடக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாட்டு பார்வையாளர்களின் ஆதரவை வெளிப்படுத்திய முக்கியக் களமாக அமைந்தது.
No comments:
Post a Comment