Featured post

Royal Salute Movie Review

Royal Salute Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம royal salute  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக...

Saturday, 20 September 2025

Kiss Movie Review

Kiss Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kiss படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  sathish. இவரு இயக்குற முதல் திரைப்படமும் இது தான்.   இந்த படத்துல  Kavin , Preethi , Prabhu, VTV Ganesh , RJ Vijay , Rao Ramesh , Devayani , Sakthi Raj , Mathew Varghese னு பலர் நடிச்சிருக்காங்க. இது ஒரு fantasy romantic comedy  படம்.  இந்த படம் sep 19 அன்னிக்கு  release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்போம். 



 nelson அ நடிச்சிருக்காரு kavin . இவரோட parents க்கு ஒரு healthy ஆனா releationship இருக்காது அதுனால இவருக்கு love மேல இருக்கற நம்பிக்கையே போய்டும். அப்போ தான் இவரு sarah வா நடிச்சிருக்க preethi யா சந்திக்குறாரு. இவங்க ஒரு வித்யாசமான book அ nelson க்கு குடுக்கறாங்க. இதுல இருந்து இவருக்கு ஒரு super ஆனா power கிடைக்குது. அதாவுது ஒரு couple kiss பன்னங்கண்ணா, அதுல இருந்து அந்த couple ஒண்ணா இருப்பாங்களா இல்ல பிரிஞ்சு போய்டுவாங்களா ன்ற அவங்களோட future அ இவரால் பாக்க முடியும். அது கடைசில இவரோட love க்கு பிரச்சனை வருது. இதுல இருந்து இந்த power மூலமா nelson என்னனா face பண்ணுறாரு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


kavin ஓட performance அட்டகாசமா இருந்தது னே சொல்லலாம். படத்துல வர emotional scenes அ இருக்கட்டும் comedy scenes அ இருக்கட்டும் ரெண்டுமே perfect அ balance பண்ணி நடிச்சிருந்தாரு. preethi ஒரு confident ஆனா girl அ படத்துல வலம் வராங்க. இருந்தாலும் இவங்களோட character க்கு இன்னும் detailing குடுத்திருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். Kavin, VTV Ganesh, and RJ Vijay , இவங்க மூணு பேரும் சேந்து பண்ணுற comedy scenes எல்லாம் செமயா இருந்தது. இவங்க மூணு பேரும் வந்தாலே audience சிரிப்பலை ல மூழ்கிட்டாங்க னே சொல்லலாம். prabhu ஒரு முக்கியமான role ல நடிச்சிருக்காரு. இவரு தான் nelson க்கு அவரோட power அ எப்படி use பண்ணனும், அதா எப்படி பண்ணனனும் னு கத்துகுடுக்கறது. rao ramesh அப்புறம் devayani தான் kavin க்கு appa amma வா நடிச்சிருக்காங்க. மத்த supporting actors ஓட performance எல்லாம் படத்துக்கு strong அ இருந்தது. vijay sethupathi இந்த படத்துக்கு narrator அ voice over குடுத்திருக்காரு. அதுவும் அழகா இருந்தது. 


படத்தோட technical side அ பாத்தோம்னா  Harish Kannan ஓட Cinematography ஒரு vibrant ஆனா atmosphere அ capture பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். ஒரு fantasy subject க்கு ஏத்த மாதிரி colour grading அ இருக்கட்டும், visuals அ இருக்கட்டும் எல்லாமே பாக்க attractive அ இருந்தது. Jen Martin’ ஓட music வேற level ல இருந்தது னு தான் சொல்லணும். படத்துல வர songs எல்லாம் catchy அ இருந்தது. படத்தோட first half செம்ம interesting அ போச்சு. அதுவும் kavin க்கு கிடைக்கற power , comedy scenes னு ரொம்ப fast அ போச்சு. second half கொஞ்சம் slow அ போன மாதிரி இருந்தது . 


audience அ முழுசா engaging அ வைக்கிற அளவுக்கு comedy , romance , fantasy னு ஒரு korean series vibe ல இருந்தது னே சொல்லலாம். kavin ஓட அருமையான நடிப்புல, ஒரு வித்யாசமான  கதைக்களத்தோட இருக்கற படம் தான் இந்த kiss . சோ மறக்காம theatre ல இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment