*மர்மமும் அதீத சக்தியும் சங்கமிக்கும் “சுமதி வளவு” – ZEE5-இல் செப்டம்பர் 26 முதல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது !*
~ இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இந்த மலையாள ஹாரர்–திரில்லர் படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ், ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். ZEE5-இல் வரும் செப்டம்பர் 26 முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்றீமிங் செய்யப்படவுள்ளது ~
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மலையாள ஹாரர்–காமெடித் திரைப்படமான சுமதி வளவு திரைப்படத்தை வரும் செப்டம்பர் 26 அன்று உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடுகிறது. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ் மற்றும் ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் பார்வையாளர்கள் ரசிக்கும்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
இப்படம் கேரளாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற வளைவை மையமாகக் கொண்டது. சுமதி வளவு எனப்படும் அந்த வளைவில், சுமதி என்ற இளம் பெண் துயரமான முறையில் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, அது பீதியூட்டும் இடமாகப் பேசப்பட்டு வருகிறது. அந்த வளைவைக் கடக்கும் ஒவ்வொருவரும் விசித்திரமான அதீத அனுபவங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த வளைவில் நேரிடும் அமானுஷ்ய சம்பவங்கள் பலரின் வாழ்க்கையை மாற்றி விடும் விதத்தில், புராணமும் நிஜமும், துயரமும் பயமும், கடந்தகாலமும் நிகழ்காலமும் ஒன்றோடொன்று கலந்த கதையாக இது நகர்கிறது.
இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் கூறியதாவது..,
“சுமதி வளவு கேரளா மக்களின் வாழ்க்கை கதைகளிலிருந்து வந்தாலும், இது நவீன பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயத்தைத் தாண்டி, துயர சம்பவங்கள் நினைவில் விட்டுச்செல்லும் மனித உணர்ச்சிகளையும் இப்படம் வெளிப்படுத்துகிறது. நினைவு, புராணம் மற்றும் மர்மம் ஆகியவற்றுக்கிடையிலான முரண்பாட்டை இந்தப் படம் காட்டுகிறது. ZEE5 மூலமாக உலகெங்கும் பார்வையாளர்களிடம் இப்படம் செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.”
நடிகர் அர்ஜுன் அசோகன் கூறியதாவது..,
“இந்த படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அமானுஷ்ய சம்பவங்களையும் உணர்ச்சிகளையும் இணைத்துக் காட்டுகிறது. பீதியூட்டும் அந்த வளைவில் சிக்கிக் கொள்கிற கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. பயம், பலவீனம், தைரியம் ஆகியவற்றை ஒரு வித்தியாசமான முறையில் ஆராய முடிந்தது. சுமதி வளைவு பல மொழிகளில் ZEE5-இல் வெளிவருவது எனக்குப் பெருமை தருகிறது.”
நடிகை மாளவிகா மனோஜ் கூறியதாவது..,
“சுமதி வளவு கேரளாவின் கலாச்சார வேர் கொண்டதோடு, அதில் நிறைய மர்மமும் சஸ்பென்ஸும் நிரம்பியுள்ளது. இப்படத்தில் ஒரு திறமையான நட்சத்திரக் குழுவுடன் பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. மர்மம், உணர்ச்சி, திகில் ஆகியவற்றை ஒருங்கே இணைக்கும் இந்தப் படம் பார்வையாளர்களை நிச்சயம் கவரும். ZEE5-இல் படம் வெளியாகும் தருணத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
ரசிகர்களே அற்புதமான ஹாரர் அனுபவத்தை, தவற விடாதீர்கள். சுமதி வளவு – உலக டிஜிட்டல் பிரீமியர், செப்டம்பர் 26 முதல், ZEE5-இல் மட்டும் – மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமிங்காகிறது.
No comments:
Post a Comment