*ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள, “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!*
ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “காந்தாரா சேப்டர் 1” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த ஆவலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல தமிழ் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் தமிழ் டிரெய்லரை 22 செப்டம்பர் 2025 மதியம் 12:45 மணிக்கு வெளியிடுகிறார்.
2022-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற காந்தாரா படத்தின் முன்கதையாக உருவாகும் இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படம், புராணங்களால் நிரம்பிய கதைக்களத்தில், கண்கவர் காட்சியமைப்புகளுடன், பார்வையாளர்களை தெய்வீகமும் சக்தியும் நிறைந்த பண்டைய உலகத்துக்குக் கொண்டு செல்லும் படைப்பாக உருவாகியுள்ளது.
காந்தாரா சேப்டர் 1 உலகளாவிய அளவில் 2 அக்டோபர் 2025 அன்று, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகிறது.
தொழில் நுட்ப குழுவில்
இயக்கம் திரைக்கதை – ரிஷப் ஷெட்டி
தயாரிப்பாளர் – விஜய் கிரகந்தூர் (ஹொம்பாலே பிலிம்ஸ்)
ஒளிப்பதிவாளர் – அரவிந்த் S காஷ்யப்
இசையமைப்பாளர் – B. அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதால், தமிழ் ரசிகர்களுக்கு ஒரு பிரமாண்டமான டிரைலர் வெளியீட்டை எதிர்பார்க்கலாம். கன்னட திரையுலகை உலக அரங்கில் கொண்டு செல்வதில் ஹொம்பாலே பிலிம்ஸ் எடுத்து வைக்கும் மற்றொரு முக்கியமான அடையாளமாக இது திகழ்கிறது.
இயற்கையின் கோபமும், அடக்க முடியாத ஆற்றலும் இணையும் இந்த மாபெரும் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டை 22 செப்டம்பர் அன்று காணத்தவறாதீர்கள்!
No comments:
Post a Comment