Featured post

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும்

 கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம...

Thursday, 2 May 2024

இயக்குனர் மணிவர்மனுக்கு கார் பரிசளித்த ஒரு நொடி தயாரிப்பாளர்கள்

 *இயக்குனர் மணிவர்மனுக்கு கார் பரிசளித்த ஒரு நொடி தயாரிப்பாளர்கள்*




மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் வெளியிட்ட திரைப்படம் "ஒரு நொடி". அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடித்த ‘ஒரு நொடி’ படம் சமீபத்தில் வெளியாகி விமர்சகளிடமும்,  ரசிகர்களிடமும்  நல்ல வரவேற்பு பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.


இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் மணிவர்மனுக்கு தயாரிப்பாளர்கள் மதுரை அழகர் மூவிஸ் அழகர், மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் கே.ஜி.ரத்திஷ் ஆகிய மூன்று பேரும் கார் பரிசளித்து அவரை உற்சாகப்படுத்தி உள்ளனர்.  தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களும் இயக்குனரை வாழ்த்தினார்.

சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பில்

 சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பில் “மாற்றம்” சமூக நலப்பணிகள் துவக்கம் !! 

















தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ்,  தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல மக்களுக்கு தனித்த முறையில் உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் இந்த அறக்கட்டளை சார்பில் மாற்றத்தை தரும் மாற்றம் செய்ல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது . இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்களும் இணைந்து செயல்படவுள்ளார். 


இவர்களுடன் கலக்கப்போவது பாலா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா அவர்கள் இணைந்து செயல்படவுள்ளனர். 


சேவையே கடவுள் எனும் அறக்கட்டளை அமைப்பின் பெயரில்  மாற்றம் செயல்பாடுகள்  இன்று முதல் ஆரம்பமானது. 


இந்த அறக்கட்டளை மூலம், தமிழக மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் தன்னார்வலர்கள் மூலம் செய்து தரப்படவுள்ளது.  இன்று முதற்கட்டமாக விவாசாயிகளுக்கு பயன்படும் வகையில், 10 டிராக்டர் 10 ஊர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பயன்பாட்டுக்கு இந்த டிராக்டரை பயன்படுத்திக் கொள்ளலாம். 


இந்த அறக்கட்டளை துவக்க விழாவில், மாஸ்டர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா கலந்துகொள்ள, இவர்களுடன் ராகவா லாரன்ஸின் தாய்  கண்மணி அம்மா அவர்களும்,  கலந்துகொண்டார். மாற்றம் அமைப்பின் துவக்க விழா பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இன்று கோலாகலமாகத் துவங்கியது. 


இவ்விழாவினில் 


மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது… 

பத்திரிக்கை ஊடக நண்பர்கள், நான் வளர்த்த குழந்தைகள், என் தாய்,  எஸ் ஜே சூர்யா என் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். 2 மாதம் முன்பு எனக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. கோவிலுக்கு போய் வந்த நாள்,  ஒரு கனவு அதை நினைத்து கண்களில் தானாக கண்ணீர் வந்தது. அது தான் இந்த மாற்றத்தின் துவக்கம். நான் அதைச் செய்யப்போகிறேன். இதைச் செய்யப்போகிறேன் அதைச் செய்யப் போகிறேன்  என சொல்ல மாட்டேன்,  செய்துவிட்டு சொல்கிறேன். இன்று மாற்றம் துவங்குவது மிகுந்த மகிழ்ச்சி. செஃப் வினோத் மாற்றம் மூலம் என்ன செய்யப்போகிறீர்கள் என்றார்,  மக்களைத் தேடிப்போய் குறைகள் கேட்டு வரப்போகிறேன் என்றேன். நீங்கள் போகும் போது சொல்லுங்கள் அதற்கான சாப்பாட்டை நான் கவனித்து கொள்கிறேன். என்றார் அவருக்கு கடவுள் மனது. அறந்தாங்கி நிஷா உங்களால் முடிந்த சின்ன அளவில், பல உதவிகளை செய்து வருகிறீர்கள் மகிழ்ச்சி. இணைந்து பணியாற்றுவோம் என்றார். என் சமீபத்திய நண்பர் எஸ் ஜே சூர்யா, அவர் ஒரு நாள் போன் செய்தார். எங்கு பார்த்தாலும் மாற்றம் என்று பார்க்கிறேன் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். நான் மாற்றம் பற்றி சொன்னேன், உடனே நானும் மாற்றத்தில் இணைகிறேன் என்றார். அவர் இதைச் சொல்வார் என நினைக்கவில்லை. சினிமாவில் மட்டுமல்ல மாற்றத்திலும் என்னுடன் இணைந்துள்ளார். இது கடவுளின் ஆசிர்வாதம். இணைந்து பயணிப்போம். என்னை இந்தளவு வளர்த்தெடுத்தது என் தாய் தான். சின்ன வயதில் என் அம்மா, என்னை எம் ஜி ஆர் மாதிரி வளர்ப்பேன் என்றார். அப்போது எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் எம் ஜி ஆர் அளவு இல்லையென்றாலும் அவரில் சிறியளவிலாவது நான் செயல்படுவேன். நாளை என் அம்மாவின் பிறந்த நாள், நாளை முதல் இந்த மாற்றம் துவங்கும் நன்றி. 



செஃப் வினோத் பேசியதாவது…

லாரன்ஸ் மாஸ்டரை வளர்த்தெடுத்த தாய்க்கு நன்றி. லாரன்ஸ் அண்ணாவிற்கும் எனக்கும் பல வருட கால நட்பு இருக்கிறது. ஜல்லிகட்டு போராட்டத்தின் போது பீச்சில் தான்  அண்ணனை முதலில் பார்த்தேன். நான் ஒரு செஃப் சார் இதில் நான் பங்கெடுத்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றேன், அப்போது நம்பர் வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டார். பின் ஒரு நாள் என்னை அழைத்து ஒரு விழாவிற்கு  பெரிய கேக் செய்யச் சொன்னார். அப்போதிலிருந்து அவருடன் இணைந்து பயணித்து வருகிறேன். மாற்றம் தொடங்கிய போது, நானும் இதில் இணைந்து பயணிக்க ஆசைப்பட்டேன். நாம் எத்தனையோ அறுசுவை உணவை சாப்பிட்டிருப்போம், ஆனால் குக்கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு அதே உணவை இந்த பயணத்தின் மூலம்  கொண்டு சேர்ப்போம் என்றேன் உடனே சரி என்றார். இந்த பயணத்தில் என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி. 


அறந்தாங்கி நிஷா  பேசியதாவது…

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ராகவா லாரன்ஸ் அண்ணா முதலில் அழைத்த போது ஒரு நடிகராக நினைத்து தான் அவரை பார்க்கப் போனேன் ஆனால் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடத்தில், அண்ணணாக மாறிவிட்டார். என் அம்மா நான் பெற்ற பிள்ளை மாதிரி இருக்கிறார் என்றார், ஆனால் அவர் எல்லோரும் பெற்ற பிள்ளை போல் தான் இருக்கிறார். மாற்றம் ஒன்று தான் மாறாதது ஆனால் இந்த மாற்றம் அமைப்பு  மூலம் பல மாற்றங்கள் நடக்கவுள்ளது. லாரன்ஸ் மாஸ்டர் முதலில் விவசாயிகளுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்றார். தேடித்தேடி செய்ய வேண்டும் என்றார். அதன் முதல் தொடக்கம் இந்த டிராக்டர் அளிக்கும் விழா. இந்த சிந்தனை அவருக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. விவசாயம் மட்டுமல்ல, கல்வி, மருத்துவம் சார்ந்து பல விசயங்கள் செய்ய வேண்டும் என்றார். அவரின் சிந்தனை எனக்கு பிரமிப்பை தந்தது. முடியாதவர்களை தேடிதேடிப் போய் உதவி செய்யப் போகிறது இந்த மாற்றம் அமைப்பு என்றார். நம் மனதிற்கு உண்மையாய் இருந்து இதைச் செய்வோம் என்றார்.  இந்த பயணத்தில் அவருடன் இனைந்து மாற்றம் மூலம் செயல்படுவோம் நன்றி. 


எஸ் ஜே சூர்யா பேசியதாவது…

மாஸ்டரை பொறுத்தவரை ஒரு தாயின் வளர்ப்பில் பல போராட்டங்களை தாண்டி தான், இந்தளவு வளர்ந்து வந்திருக்கிறார். இத்தனை தடைகளை தாண்டி வளர்ந்து, வந்த பிறகு,  எல்லோருக்கும் உதவனும் எனும் எண்ணம் வருவது  மிகப்பெரியது. சிலருக்கு சரி நாமும் உதவனும் என எண்ணம் வரும். ஆனால் அதை எத்தனை நாளைக்கு செய்ய முடியும், ஆனால் இவர் 25 வருடங்களாக செய்து வருகிறார். ஊனமுற்ற குழந்தைகள் மீது உங்களுக்கு ஏன்  இத்தனை அன்பு என்று கேட்டேன், அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் சொன்னார், அவர் அம்மா செய்த ஒரு  நிகழ்வைப் பற்றி சொன்னார். அதைக்கேட்டபோது தான் புரிந்தது. அவர் ஒரு லெஜெண்ட். ஒரு படம் முடிந்தால் பெரிதாக அந்த நடிகர்களோடு உறவு இருக்காது, பார்க்கும் போது பேசிக்கொள்வோம் அவ்வளவு தான், ஆனால்  இவருடன் இணைந்து பயணிக்கிறேன் என்றால் அவரின் அன்பு தான் காரணம். அவரின் சொந்த  முயற்சியில் சொந்தப் பணத்தில் தான் உதவிகள்  செய்து கொண்டிருக்கிறார். உதவி செய்ய வருபவர்களை கூட பணம் வாங்காமல்  நீங்களே இவர்களுக்கு செய்யுங்கள் என கை கட்டுகிறார். இது எத்தனை பாரட்டுக்குரிய விசயம். அவர் வளர்த்த குழந்தைகள் இன்று வளர்ந்து பலருக்கு உதவி செய்கிறார்கள். இது எத்தனை பெரிய விசயம். அவர் என்னை பல கோவில்களுக்கு அழைத்து செல்வார். என்னுள்ளேயே பல மாற்றங்களை அவர் நிகழ்த்தியுள்ளார். இந்த மாற்றத்தில் நானும் இணைந்து கொள்கிறேன் என்றேன் ரொம்ப சந்தோசப்பட்டார். முடியாதவர்கள் பலரின் வாழ்க்கைக்கு, பலருக்கு பல உதவிகளை செய்வதில் நானும் அவருடன் இணைந்து கொள்கிறேன். முதல் கட்டமாக 10

லட்சம் அளிக்கிறேன்.  நீங்கள் செய்யுங்கள் என்றேன் ஆனால் நீங்களே உங்கள் கையால் செய்யுங்கள் என்றார்.  கண்டிப்பாக செய்கிறேன் என்றேன். இது மட்டுமல்லாமல் என்னால் முடிந்த அளவு தொடர்ந்து அவருடன் இணைந்து பணியாற்றுவேன். இந்த மாற்றம் மிகப்பெரிய அளவில் ஒரு மாற்றத்தை கொண்டு வரப்போகிறது அனைவருக்கும் நன்றி.   




தயார் கண்மணி அம்மாள் பேசியதாவது…

அனைவரும் நன்றாக இருக்க ராகவேந்திராவை வேண்டிக்கொள்கிறேன். இந்த மாற்றம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. எனக்கு எப்போதும் சர்ப்ரைஸாக தான் சொல்வார். இங்கு வந்த பிறகு தான் தெரிகிறது இது மிகப்பெரிய மாற்றமாக உள்ளது. இந்த மக்கள் சேவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இன்னும் பல சேவைகள் என் மகன் செய்ய வேண்டும். அரசியலாக மட்டும் ஆக்கிவிடாதே தம்பி. தொடர்ந்து சேவையை செய். அனைவரும் இணைந்து உதவி செய்யுங்கள். கொரானா காலத்தில் பல உதவிகள் தடை பட்டது இப்போது மீண்டும் எல்லாம் ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சி.  அனைவருக்கும் நன்றி.   


விழாவில் 1 டிராக்டர் அறந்தாங்கி நிஷா பொறுப்பில் அவர் ஊரில் உள்ள விவாசாயிகள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. 2வது டிராக்டர் விழுப்புரத்தை சேர்ந்த விவாசாயிக்கு வழங்கப்பட்டது. இன்னும் 8 டிராக்டர்கள் மாற்றம் அமைப்பில் சார்பில். தமிழகத்தில் தேவைப்படும் விவாசாயிகளின்  ஊர்களுக்கு தேடிச்சென்று வழங்கப்படவுள்ளது.

பவன் கல்யாண் நடிப்பில், மெகா சூர்யா

 *பவன் கல்யாண் நடிப்பில், மெகா சூர்யா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஹரி ஹர வீர மல்லு பாகம்-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்' படத்தின் டீசர் இப்போது வெளியாகியுள்ளது!*



இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான பவன் கல்யாண், தனது சினிமா கரியரில் முதன்முறையாக 'ஹரி ஹர வீர மல்லு' என்ற பீரியட் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் கதையில் நடித்துள்ளார். பழம்பெரும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தனது புகழ்பெற்ற மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் மூலம் இதுவரை கண்டிராத கேன்வாஸில் இப்படத்தை தயாரித்துள்ளார். 17 ஆம் நூற்றாண்டில் நடக்கும் ஆக்‌ஷன் அட்வென்சர் கதை என்பதால் அதற்கேற்றவாறு சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்ற பிரம்மாண்டமான செட்களை சமரசமற்ற பிரமாண்டத்துடன் சர்வதேச தரமான தயாரிப்பு மதிப்புகளுடன் ஆடம்பரமான பட்ஜெட்டில் தயாரிப்பாளர்கள் சிறப்பாக உருவாக்கியுள்ளனர்.


தங்களுக்குப் பிடித்த நட்சத்திரத்தின் புதிய அதிரடி அவதாரத்தை பெரிய திரையில் பார்த்து ரசித்து கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இரண்டு பாகங்களாக படம் வெளியாக இருக்கிறது. முதல் பாகம் 'ஹரி ஹர வீர மல்லு பகுதி-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 'தர்மம் கோசம் யுத்தம் (War for Justice)' என்ற டேக்லைனும் தரப்பட்டுள்ளது. 


டீசரில் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு கதாபாத்திரம் நீதிக்காகப் போரை நடத்தும் 'தனி போர் வீரன் (A Lone Warrior)' என வர்ணிக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் சுரண்டப்பட்டு பணக்காரர்கள் வளரும நாட்டில் நீதியை காக்கும் போர்வீரனாக, அந்த வார்த்தைகளின் காட்சி பிரதிநிதித்துவத்தை பவன் கல்யாண் திரையில் கொண்டு வந்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியின் அசரடிக்கும் இசை, செட்களின் பிரம்மாண்டம், காட்சி தரம் என எல்லாமே திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு அட்டகாசமான அனுபவத்தை தரும் என உறுதியளிக்கின்றன.


முகலாயப் பேரரசராக பாபி தியோலும், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களின் நாயகனாக பவன் கல்யாணும் தங்கள் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். இரு நடிகர்களின் உடல் மொழி, அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கடுமையான தோற்றம் என இரண்டு நடிகர்களின் நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையில் இந்த கதாபாத்திரங்கள் அமைந்துள்ளது. டீசர் காட்சிகள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது. 


இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி ஏற்கனவே 'காஞ்சே', 'கௌதமிபுத்ர சதகர்ணி' மற்றும் 'மணிகர்னிகா' போன்ற மறக்கமுடியாத வெற்றிகரமான படங்களை இயக்கியுள்ளார். மேலே சொன்ன படங்களின் கதாநாயகர்கள் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக தங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள். 'ஹரி ஹர வீர மல்லு' கூட இதேபோன்ற ஒரு ஹீரோதான். பணக்கார மற்றும் மிகவும் வஞ்சகமான ஆட்சியாளர்களிடமிருந்து கொள்ளையடித்து, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து நீதியைப் பெற உதவுகிறார்.


இந்த டீசர் வெளியீட்டின் போது, ​​படக்குழுவினர் இன்னொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.  அதாவது, 'படையப்பா', 'நட்புக்காக' போன்ற படங்களின் எழுத்தாளரும், 'எனக்கு 20 உனக்கு 18', 'நீ மனசு எனக்கு தெலுசு', 'ஆக்ஸிஜன்' போன்ற படங்களை இயக்கியவருமான இயக்குநர் ஜோதி கிருஷ்ணா படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை கிரிஷ் ஜகர்லமுடி மேற்பார்வையில் முடிக்க உள்ளார். முந்தைய கமிட்மென்ட் மற்றும் படப்பிடிப்பில் எதிர்பாராத தாமதம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


பவன் கல்யாணுடன் நடிகை நிதி அகர்வால், நடிகர் பாபி தியோல், சுனில், நோரா ஃபதேஹி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசையமைக்கிறார். ஞானசேகர் விஎஸ் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்கள்.


இப்படம் 2024ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


*நடிகர்கள்*: பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல், எம். நாசர், சுனில், ரகு பாபு, சுப்பராஜு & நோரா ஃபதேஹி


*தொழில்நுட்ப குழுவினர்:*


தயாரிப்பாளர்: ஏ. தயாகர் ராவ்,

இசை: எம்.எம். கீரவாணி,

ஒளிப்பதிவு: ஞானசேகர் VS, மனோஜ் பரமஹம்சா,

எடிட்டர்: பிரவீன் கே.எல்.,

பாடல் வரிகள்: 'சிறிவெண்ணெலா' சீதாராம சாஸ்திரி, சந்திரபோஸ்,

விஷுவல் எஃபெக்ட்ஸ்: ஹரி ஹர சுதன், சோசோ ஸ்டுடியோஸ், யூனிஃபி மீடியா, மெட்டாவிக்ஸ்,

தயாரிப்பு வடிவமைப்பாளர்: தோட்டா தரணி,

நடனம்: பிருந்தா, கணேஷ்,

சண்டைக்காட்சிகள்: ஷாம் கௌஷல், டோடர் லாசரோ ஜூஜி, ராம்-லக்ஷ்மன், திலீப் சுப்பராயன், விஜய் மாஸ்டர்

பேனர்: மேகா சூர்யா புரொடக்‌ஷன்

Pawan Kalyan & Mega Surya Production’s

Pawan Kalyan & Mega Surya Production’s prestigious Hari Hara Veera Mallu Part-1: Sword vs Spirit  Teaser out now



One of the highly popular and most sought after stars of Indian Cinema, Pawan Kalyan, for the first time in his illustrious career has decided to feature in a period action adventure, Hari Hara Veera Mallu. Legendary producer AM Rathnam is producing the film on his prestigious Mega Surya Productions on a never before seen canvas. Being an adventure actioner about a legendary heroic outlaw during 17th century, Producers have specially built Gigantic sets like Charminar, Red Fort and Machilipatnam port with uncompromising grandeur on a lavish budget with International standard production values. 


Fans and movie-lovers have been eagerly waiting for the film to celebrate their favorite star's new action avatar on Big screens in its full glory. Answering their gigantic anticipation, the makers have released a teaser from the film announcing that it has been divided into two parts. The first part has been titled as "Hari Hara Veera Mallu Part-1: Sword vs Spirit"  with a caption, "Dharmam kosam Yuddham" which loosely translates to "War for Justice".


In the teaser, the makers have described Pawan Kalyan aka Hari Hara Veera Mallu's character as " A Lone Warrior" who "wages a war for Justice" in the land "Where the poor are exploited and the Rich Thrive". And the character appears exactly like the visual representation of those words. The grandeur of sets, visual quality and pulsating background score of Oscar award winning composer, MM Keeravaani; all promise a spell-binding experience in theatres. 


Adding to these elements, Bobby Deol as a Mughal Emperor and Pawan Kalyan as a hero of the poor, oppressed and needy look apt for their roles. The body language of both the actors, fierce looks designed for them promise an epic showdown between two acting powerhouses. Teaser induces goosebumps and inspire us to be on the side of legendary outlaw in his battle for Justice.


Director Krish Jagarlamudi has already delivered memorable blockbusters like "Kanche", "Gautamiputra Satakarni" and "Manikarnika" featuring ferocious heroes who fought for the Independence of their nation against the oppressors. Even "Hari Hara Veera Mallu" boasts of a similar kind of a ferocious hero who loots from the wealthy & highly crooked rulers of the land and helps the needy, oppressed poor people to attain justice for them. 


On this occasion of teaser release, makers have made an announcement that writer-director, Jyothi Krisna, who earlier directed films like "Enakku 20 Unakku 18", "Nee Manasu Naaku Telusu", "Oxygen" and worked as writer for cult blockbusters like "Natpukkaga" and "Padayappa" is going to finish the remaining shooting and post production work of the film under the supervision of Krish Jagarlamudi. Due to prior commitments and unforseen delay in the completion of the film's shoot. 


Along with Pawan Kalyan, beautiful actress Nidhhi Agerwal, actor par excellence Bobby Deol, Sunil, Nora Fatehi and several others are cast in the film in key roles. Oscar winning composer MM Keeravaani is composing music and background score for the film. Ace cinematographers Gnanasekhar VS and Manoj Paramahamsa are handling cinematography. 


Makers have announced that the movie will release towards the end of the year, 2024. 



Hari Hara Veera Mallu Cast & Crew Details: 


Featuring: Pawan Kalyan, Nidhhi Agerwal, Bobby Deol, M. Nassar, Sunil, Raghu Babu, Subbaraju & Nora Fatehi 


Producer: A Dayakar Rao

Music: MM Keeravaani


Cinematography: Gnanashekar VS, Manoj Paramahamsa

Editor: Praveen KL

Lyrics: 'Sirivennela' Seetharama Sastry, Chandrabose

Visual Effects: Hari Hara Suthan, Sozo Studios, Unifi Media, Metavix 

Production Designer: Thota Tharani

Choreography: Brinda, Ganesh

Stunts: Sham Kaushal, Todor Lazaro JuJi, Ram-Laxman, Dhileep Subbarayan, Vijay Master

Banner: Mega Surya Production

Pushpa Pushpa’! The first single from ‘Pushpa 2 The Rule’ celebrates the uncommon journey

 *‘Pushpa Pushpa’! The first single from ‘Pushpa 2 The Rule’ celebrates the uncommon journey of a common man. Released on International Labour Day and all set to rule the music charts!*



Pushparaj declares a powerful message ‘Your hand is your brand’!


1st May, celebrated globally as international Labour Day, marks a special day this year as we welcome a new reason for celebration. Pushpa’s story of a common labourer ruled our hearts when he burst on to the screens with ‘Pushpa The Rise’ and now he is back to Rule as the celebratory song of Pushparaj releases today in 6 languages to become the new anthem of ambition. The lyrical video which gives glimpses from the film titled ‘Pushpa Pushpa’ is already creating waves all over the internet. 


   The video displays the power of Brand Pushpa which was teased in with the ‘Hand of Pushpa” teaser which was launched last week setting audiences into a frenzy. The launch of the song puts Pushpa’s stamp of authority on the world of entertainment with a scintillating hook step and brings alive the craze of ‘Pushpaisms’ which have become pop culture since the release of Pushpa 1. Icon Star Allu Arjun proves once again why he is the star who cuts across every language and every border across the nation and rules our hearts and minds.


Music director Devi Shri Prasad who won a National Award for the music of Pushpa the Rise, with the new song has again created a heart throbbing number. The groovy tune of the song is definitely an earworm and is set to top the music charts for days to come. The lyrics and the upbeat music are no less than a catalyst to the audiences overwhelming anticipation for the film release. The song is released in Telugu, Tamil, Hindi, Kannada, Malayalam & Bengali languages. Devi Shri Prasad has roped in popular singers like Nakash Aziz, Deepak Blue, Mika Singh, Vijay Prakash, Ranjith Govind & Timir Biswas to sing the respective versions of the song. The music of Pushpa 2 The Rule is released all over by T Series.


Pushpa 2 The Rule is the most awaited film of 2024 and as the nation waits in anticipation for this Tsunami of entertainment the first track has only heightened expectations. Slated to release on August 15th, 2024 the film features the powerful cast of Allu Arjun, Rashmika Mandanna and Fahadh Faasil, is helmed by Maestro director Sukumar & produced by Mythri Movie Makers in association with Sukumar Writings.

நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2: தி ரூல்

 *நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2: தி ரூல்' படத்தில் இருந்து 'புஷ்பா புஷ்பா' முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது!* 



சர்வதேச தொழிலாளர் தினம் உலகளவில் மே 1 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே 1-ஐ கொண்டாட இன்னும் சிறப்பான புதிய காரணம் ஒன்று இணைந்துள்ளது. ஏனெனில், நம் இதயங்களைக் கொள்ளை கொண்ட ‘புஷ்பா2: தி ரைஸ்’ திரைக்கு வர இருக்கிறது. இன்று புஷ்பராஜின் கொண்டாட்டப் பாடல் 6 மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் புதிய ஆந்தமாக மாறியிருக்கிறது. ‘புஷ்பா புஷ்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் லிரிக்கல் வீடியோ ஏற்கனவே இணையம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.


கடந்த வாரம் வெளியிடப்பட்ட ‘ஹேண்ட் ஆஃப் புஷ்பா’ டீசரில் புஷ்பாவின் கை பிராண்ட் ஆனது. 'புஷ்பா 1' படம் வெளியானதிலிருந்து  'புஷ்பாயிஸம்' என ரசிகர்களுக்குப் பிடித்த ஒன்றாக உள்ளது. தேசம் முழுவதும் உள்ளா அனைத்து மொழி ரசிகர்களின் இதயங்களையும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் 'புஷ்பா'வாக மீண்டும் வென்றுள்ளார்.  


'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் இசைக்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், 'புஷ்பா2' படத்தில் புதிய பாடல் மூலம் மீண்டும் சார்ட் பஸ்டர் இசையைத் தந்துள்ளார். ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் இந்தப் பாடல் ரிப்பீட் மோடில் முதலிடம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பாடல் வரிகளும் உற்சாகமான இசையும் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக்கியுள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளில் பாடல் வெளியாகியுள்ளது. நகாஷ் அஜீஸ், தீபக் ப்ளூ, மிகா சிங், விஜய் பிரகாஷ், ரஞ்சித் கோவிந்த் மற்றும் திமிர் பிஸ்வாஸ் போன்ற பிரபல பாடகர்களை பாடலை அந்தந்த மொழிகளில் பாடியுள்ளனர். 'புஷ்பா2:  தி ரூல்' இசையை டி சீரிஸ்  வெளியிட்டது. 


'புஷ்பா2: தி ரூல்' இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம்.  படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் வெளியாகியுள்ள இந்த முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிடப்பட உள்ளது. மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார்  படத்தை இயக்கியுள்ளார்  மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

Wednesday, 1 May 2024

We are overjoyed to share the incredible news of "Are You OK Baby" receiving heartfelt

 We are overjoyed to share the incredible news of "Are You OK Baby" receiving heartfelt acclaim at the prestigious 14th DSPFF-24. This recognition is not just an honor for our team but a reassurance that socially relevant themes and close to life narrations work in their own unique ways. 





"Are You OK Baby" is based on a real life incident, Inspired by the lives of real people and the harsh realities they face, it aims to shine a light on some of society's darkest corners. We were responsible enough to make the system the hero and not any individual. 


One of the highlights of our journey was collaborating with the legendary maestro Ilayaraja, whose soul-stirring music has added an indelible touch of magic to our narrative. His involvement has been nothing short of a blessing, elevating the emotional depth of our storytelling.


At its core, "Are You OK Baby" bravely confronts the widespread crimes against children, such as illegal adoption and trafficking, that often lurk in the shadows. By weaving these important issues into the fabric of our story, we hope to ignite conversations and inspire action towards a more just and compassionate society.


Moreover, our film delves into the transformative role of reality shows in raising awareness about these critical issues. It explores how media, judiciary, and society at large respond to such platforms, offering a nuanced reflection of our collective conscience.


None of this would have been possible without the extraordinary performances delivered by our talented cast, who poured their hearts and souls into their respective roles. Their dedication and commitment have truly brought our vision to life on the silver screen.


As a team, we are immensely grateful for the support and encouragement we have received throughout this journey. The producer’s unwavering belief in our project has fueled our passion and commitment to storytelling that matters.


"Are You OK Baby" is more than just a film; it's a testament to the resilience of the human spirit and the power of cinema to drive positive change. We are deeply humbled by the recognition it has received at the 14th DSPFF-24 and look forward to sharing its message with audiences worldwide.

இதயத்தை அசைத்தன' சீனு ராமாசாமிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு

'இதயத்தை அசைத்தன'


சீனு ராமாசாமிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு 






இயக்குனர்/கவிஞர் 

சீனு ராமசாமி எழுதிய 

'மாசி வீதியின் கல் சந்துகள்'

என்ற அவரது 

நான்காவது கவிதை தொகுப்பை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டது 

அந்த நவீன தமிழ்க் கவிதைகளை படித்து கவிஞர் வைரமுத்து அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



அன்புமிகு சீனு!


‘மாசி வீதியின் கல் சந்துகள்’ பார்த்தேன்.


ஈரமும் சாரமும் மிக்க கவிதைகள்.

கவனம் ஈர்த்தன; புருவம் உயர்த்தின.


சான்றாக, 


'மணல் திருடனுக்கும் 

அஸ்தி கரைக்கத் தேவைப்படுகிறது நதி'


'ஏழையின் உடலை 

அவன் உறுப்புகள் கைவிடுதல் துயரம்'


போன்றவை இதயத்தை அசைத்தன.


தொகுப்பில் செம்மையை நோக்கிய 

நகர்வு  தெரிகிறது.


கலைத்துறை கவிதைத்துறை இரண்டிலும் 

உச்சம் தொடும் அசுரத்தனம் தெரிகிறது.


வாழ்த்துக்கள்.



-வைரமுத்து

நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் 'குரங்கு பெடல்' படத்தின் பத்திரிக்கையாளர்கள்

 *நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் 'குரங்கு பெடல்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*













'மதுபானக்கடை', 'வட்டம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'குரங்கு பெடல்'. இது ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.


படத்தின் எழுத்தாளர் ராசி அழகப்பன், "இந்தப் படத்தின் கதை ஆறு வயதில் எனக்கும் என் அப்பாவுக்கும் நடந்த ஒன்று. அதை படமாக்கிய இயக்குநர் கமலக்கண்ணனுக்கு நன்றி. சைக்கிள் கிராமத்தின் அடிப்படை வாகனம். கிராமங்களுக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் இதைப் பார்க்கலாம். எல்லோருமே சைக்கிள் ஓட்டியிருப்பீர்கள். அதனை நினைவுப்படுத்தும் வகையில் இந்தப் படம் இருக்கும். உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை" என்றார். 


வசனகர்த்தா பிரபாகரன், "சரியான நேரத்தில் சரியான நபர் இந்தப் படத்தை வெளியிடுகிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம். 'அந்த காலத்துல...' என கதை ஆரம்பிப்பவர்களை தேடிப்பிடித்தோம். ஏனெனில், அவர்களிடம் சொல்வதற்கு நிறைய கதைகளும் நினைவுகளும் இருக்கும். இந்தப் படத்தில் வேலை பார்த்தவர்களும் இது அவர்களுடைய படம் என்று நினைத்துதான் வேலை பார்த்தனர். நீங்களும் படம் பார்த்து ஆதரவு கொடுங்கள்".


ஒளிப்பதிவாளர் சுனில் பாஸ்கரன், "படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் ப்ரோ, 'உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார். படத்தை பிரசண்ட் செய்ய சொன்னோம். அதை சரியாக செய்து கொடுத்தார். அவருக்கு நன்றி". 


இயக்குநர், பாடலாசிரியர் பிரம்மா, "சமீபகாலங்களில் குழந்தைகளுக்கான படங்கள் எதுவும் வருவதில்லை. எல்லாம் வன்முறை படங்கள் தான். பல வருடங்கள் கழித்து குழந்தைகளுக்கான படமாக 'குரங்கு பெடல்' வந்துள்ளது. பெரிய நம்பிக்கையை இந்தப் படம் கொடுக்கும். எனக்குப் பிடித்த இந்தப் படம் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார். 


எடிட்டர் சிவநந்தீஸ்வரன், "குழந்தைகளுக்கான படம் இல்லை என்பது உண்மைதான். இப்போது வரும் படங்கள் நம்முடைய குழந்தைகளை நெருக்குதலுக்கு ஆளாக்குகின்றன. நம்முடைய பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் அமைதியாக அமர்ந்து இந்தப் படம் பார்க்கலாம். டிஜிட்டல் உலகம் குழந்தைகளை எப்படி மாற்றுகிறது என்பது பயமாக இருக்கிறது. அதனால் குழந்தைகள் என்ன பார்க்க வேண்டும், என்ன கேட்க வேண்டும் என்பதை பெற்றோராக தீர்மானிக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. அதற்கான சிறு முயற்சி தான் இந்த படம். அதற்கான பிளாட்ஃபார்ம் அமைத்துக் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி".


நடிகர் ஜென்சன் திவாகர், "படத்தைப் போலவே படப்பிடிப்பும் ரிலாக்ஸாக இருந்தது. இயக்குநர் கமல் அண்ணா ரொம்ப பொறுமையாக எங்களை ஹேண்டில் செய்தார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்". 


தயாரிப்பாளர் சவிதா, " இந்தப் படம் ஆரம்பித்ததில் இருந்து படத்தை வெளியிட்டு கொடுக்கும் சிவகார்த்திகேயன் சார் வரைக்கும் அனைவருக்கும் நன்றி.  'குரங்கு பெடல்' கதை கேட்டதும் உடனே நான் கனெக்ட் ஆகிவிட்டேன். சைக்கிள் நம்முடைய முன்னேற்றத்தில் முக்கியமானது. குறிப்பாக, பெண்களுக்கு பல சுதந்திரம் கொடுத்தது". 


தயாரிப்பாளர் சஞ்சய், "எங்கள் எஸ்.ஆர்.ஜே. புரொடக்‌ஷன்ஸின் முதல் படம். படத்தை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி!".


எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் கலை, " இந்தப் படம் பார்த்ததும் எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது. இண்டர்நெட், மொபைல் இல்லாத காலக்கட்டத்தில் வாழ்க்கை எப்படி நிதானமாக இருந்தது என்பதை இதில் பார்க்கலாம். இந்தப் படத்தின் முக்கிய ஸ்ட்ரென்த் இயக்குநர் கமலக்கண்ணன், தயாரிப்பாளர் சவிதா. நிச்சயம் பலருக்கும் நினைவுகளைத் தூண்டி விடும்". 


நடிகர் காளி வெங்கட், "இந்தப் படம் எனக்கு மிக முக்கியமானது. என் வாழ்க்கையின் பல முக்கிய தருணங்களை இந்தப் படம் நினைவுப்படுத்தி இருக்கிறது. 'குரங்கு பாடல்' கோவா ஃபிலிம் பெஸ்டிவல் ஒன்றில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றது. எங்க அப்பா எனக்கு சைக்கிள் ரெடி பண்ணி கொடுத்த நியாபகங்கள் எல்லாம் எனக்கு இந்தப் படத்தில் வந்தது. உங்களுக்கும் பிடிக்கும்". 


இசையமைப்பாளர் ஜிப்ரான், " இந்தப் படம் பார்த்ததும் எனக்கு கனெக்ட் ஆகிவிட்டது. நமக்கு மீசை முளைப்பதற்கு முன்னால், நாம் பெரிய பையனாகி விட்டோம் எனச் சொல்வது சைக்கிள்தான். 'வாகை சூடவா' படத்திற்குப் பிறகு கிராம சூழலில் இசை செய்ய இந்தப் படம் வாய்ப்புக் கொடுத்தது. படத்தை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி". 


இயக்குநர் கமலக்கண்ணன், "இந்தப் படம் மக்களிடம் போய் சேரக் காரணமாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தை அவர்களுடைய சொந்த படமாக நினைத்து உருவாக்கிய என் படக்குழு அனைவருக்கும் நன்றி. சென்சிபிளான படம் எடுத்துள்ளோம். பார்த்துவிட்டு செல்லுங்கள்".