*கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் வழங்கும், ப்ரீத்தி கரிகாலன் இயக்கத்தில் பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!*
உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மிகப்பிடித்த ஜானர்களில் ஒன்று ரொமாண்டிக் காமெடி. அழகான தருணங்கள், மனதை வருடும் இசை, கண்கவரும் காட்சிகள் என கலர்ஃபுல் எண்டர்டெயினரான ரொமாண்டிக் காமெடி ஜானரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது கோல்டன் கேட் ஸ்டுடியோஸ். சமீபத்தில், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிய பூஜையுடன் படம் தொடங்கியது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தில் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சுப்ரிதா நடிக்கிறார். இவர்களுடன் ஜென்சன் திவாகரும் நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் ப்ரீத்தி கரிகாலன் பகிர்ந்து கொண்டதாவது, "எல்லோரும் தங்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்ளும்படியான தோற்றம் விக்ரமனிடம் உள்ளதாலேயே அவரை இந்தக் கதைக்கு தேர்ந்தெடுத்தேன். இந்தக் கதாபாத்திரத்தின் ஆழத்தையும் நேர்மையையும் விக்ரமன் நிச்சயம் திரையில் சரியாக பிரதிபலிப்பார்" என்றார்.
படத்தின் கதை குறித்து கேட்டபோது, "இன்றைய பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாக்குகிறோம். இசையும் விஷூவலும் அருமையாக இருக்கும். எளிமையான அதே சமயம் தனித்துவமான கதையாக உருவாகிறது" என்றார்.
படப்பிடிப்பு செப்டம்பர் 10 ஆம் தேதியில் இருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கிறது. ஒரே ஷெட்யூலாக முடிய இருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ரொமாண்டிக் காமெடி அனுபவத்தை கொடுக்கும்.
*தொழில்நுட்பக் குழு விவரம்:*
ஒளிப்பதிவு: ஸ்ரீதர்,
படத்தொகுப்பு: ராமர்,
இசை: அஜேஷ் அசோகன்
No comments:
Post a Comment