Featured post

Conjuring Movie Review

Conjuring Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம conjuring part 4 ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு  தான் releas...

Friday, 5 September 2025

Bad Girl Movie Review

Bad Girl Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம badgirl  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு  தான் release ஆயிருக்கு. vetrimaran யும் anurag kashyap தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கிறது varsha bharath.  இந்த படத்துல anjali sivaraman , shanthipriya , saranya , hridhu , teejay arunasalam , sashank னு பலர் நடிச்சிருக்காங்க. 



இது ஒரு coming of age movie . ஒரு bold ஆனா concept அ தான் இந்த படத்துல எடுத்திருக்காங்க. இந்த படத்தோட trailer release ஆனதுக்கு அப்புறம் நெறய சர்ச்சைகள் வந்தது. அதோட இந்த படத்தை International Film Festival Rotterdam ல premier யும் பண்ணிருந்தாங்க. varsha bharath க்கு இது தான் direct பண்ணுற முதல் படம். இந்த படத்தோட கதையை ஒரு வரில சொல்லனும்னா ramya வை நடிச்சிருக்க anjali sivaraman ஓட 15 வயசு ல இருந்து 32 வயசு வரைக்கும், இவங்க life ல வர love relationships அ தான் காமிக்கறாங்க. school ல பாக்கும் போது ramya ரொம்ப bored ஆனா character அ காமிக்கறாங்க. இவங்க brahmin வீட்டுல வளந்த பொண்ணு. ரம்யா ஓட அம்மாவா நடிச்சிருக்காங்க sundari அ நடிச்சிருக்க shanthipriya . இவங்களும் தன்னோட  பொண்ணு படிக்கற அதே ஸ்கூல் ல teacher அ வேலை பாத்துட்டு இருப்பாங்க. ramya school ல படிக்கும் போது nalan அ நடிச்சிருக்க hridhu வை love பண்ணுவாங்க. இந்த விஷயத்தை கேட்ட ஒடனே சுந்தரி ரொம்ப shock ஆயிடுறாங்க. 


ஸ்கூல் முடிஞ்சு college போற ramya life அ ரொம்ப புதுசா பாக்குறாங்க. college ல தான் arjun அ நடிச்சிருக்க sashank அ love பண்ண ஆரம்பிக்குறாங்க. arjun தான் தன்னோட forever , இவன் தான் உலகம் னு சுத்தி வராங்க ramya. இந்த phase ல reality அ base பண்ணி இல்லாம ஒரு dreamland ல love அ பாக்குறாங்க னே சொல்லலாம். ஆனா arjun ரொம்ப toxic அ behave பண்ணுறாரு. இதுனால மனசு ஒடஞ்சு போயிடுறாங்க ramya. இந்த கஷ்டத்துல இவங்களுக்கு உறுதுணை யா நிக்குறது selvi அ நடிச்சிருக்க saranya தான். இப்போ இவங்களுக்கு  32 வயசு ஆகியிருக்கும் இப்போ தான் irfan  அ நடிச்சிருக்க teejay  ஓட breakup ஆயிருக்கும். இதுல இருந்து தான் இவங்க character transform ஆகுது. ஒரு dreamland ல இருந்து romance அ பாத்தவங்க, இவங்க  relationship ல எடுத்த choice வச்சு reflect பண்ண ஆரம்பிக்குறாங்க. 


நம்ம usual பாக்குற male centric romance அ விட இது ரொம்ப வித்யாசமா தான் இருந்தது. ஒரு ஆண் ஓட பக்கத்தை focus பண்ணாம ஒரு பெண் ஓட விருப்பம், அவளோட  ஆசை னு female centric அ எடுத்துட்டு போயிருக்காங்க. இந்த படத்தோட writing அண்ட் direction ரெண்டுமே super அ இருந்தது. முக்கியமா dialogues அப்புறம் scene ஓட setting னு எல்லாமே natural ஆவும் engaging ஆவும் இருந்தது. ஒரு பெண் ஓட  காதல் அப்புறம் personal அ அவங்க சந்திக்கிற பிரச்சனைகள் னு ரொம்ப detailed அ காமிச்சிருக்காங்க னே சொல்லலாம். usual அ ஒரு heroine அ ரொம்ப perfect அ தான் காமிப்பாங்க. ஆனா ramya தப்பு பண்ணுவாங்க, பிரச்சனைல மாட்டிப்பாங்க, reflect பண்ணுவாங்க இதெல்லாமே ரொம்ப natural எ இருந்தது. Preetha Jayaraman, Jagadeesh Ravi, and Prince Anderson னு இவங்களோட cinematography செமயா பொருந்தி இருந்தது னே சொல்லலாம். ramya ஓட romantic illusions அ காமிக்க்ர விதமா pop colours அ காமிக்க்ரதும் wide angle shot வைக்குறதும் னு ரொம்ப அழகா இருந்தது. amit trivedi ஓட music ரம்யா ஓட character அ highlight பண்ணற விதமா அமைச்சிருந்தது. 


usual அ ஸ்கூல் பசங்க நாளே corridors ல restroom ல group அ நின்னு discuss பண்ணுறது னு ஒரு exact ஆனா reflection அ படத்துல குடுத்திருக்காங்க. இந்த மாதிரி நெறய scenes அ releate பண்ணிக்க முடியுது. ramya அடிக்கடி நான் ஏன் இப்படி இருக்கேன் னு தனக்கு தானே கேள்வி கேட்பாங்க. இந்த ஒரு கேள்வி தான் இவங்களோட life அ மாத்துது. இவங்களும் சரி இவங்களோட அம்மா வான sundari யும் சரி, ஒருத்தவங்களோட அடையாளம் ன்றது family, கத்துக்கற behaviour , பேசப்படாத generational problems னு சொல்லுவாங்க. இதெல்லாமே நம்மள யோசிக்க வைக்கிற மாதிரி அமைச்சிருக்கு . 


 சுதந்திரமா இருக்கிறது நம்பிக்கை துரோகம் கிடையாது அதுவும் ஒரு விதமான self  love  தான் னு ramya சொல்லற dialogue ஒரு பக்காவான feminist touch அ குடுக்குது. ஆரம்பத்துல immatured  அ இருந்த ramya கடைசில expereince னால எவ்ளோ mature ஆயிருக்காங்க ன்றது தான் இந்த படத்தோட highligt அ இருக்கு. 


மொத்தத்துல generation அ தொடருற பிரச்சனைகள், feminism னு அழுத்தமா சொல்லிருக்க படம் தான் இந்த badgirl. சோ மறக்காம  இந்த படத்தை உங்க பேமிலி and friends ஓட சேந்து theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment