நேச்சுரல் ஸ்டார் நானி – ‘தி பாரடைஸ்’ படத்திலிருந்து புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது !!
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் “தி பாரடைஸ்” படத்திலிருந்து புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது !!
சினிமாவில் 17 ஆண்டுகளை நிறைவு செய்யும் நேச்சுரல் ஸ்டார் நானி, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தனது புதிய பரிணாமத்துடன் வருகிறார். உலகளாவிய ஆக்சன் படமான ‘தி பாரடைஸ்’ படத்திற்காக, நானி தனது தோற்றத்தை முழுமையாக மாற்றி, சக்திவாய்ந்த, பீஸ்ட் மோட் அவதாரத்தில் ‘ஜடல்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜிம் புகைப்படத்தில், நானி தடிமனான கை, பருமனான உடற்கட்டுடன், உண்மையான ஆக்சன் ஹீரோவாக காட்சியளிக்கிறார். ‘தசரா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா, இந்த கதாபாத்திரத்தை மிகுந்த வலிமை மிக்கதாக வடிவமைத்துள்ளார். அதற்காக நானி தினமும் இரண்டு முறை வொர்க்அவுட், ஹெவி ரெசிஸ்டன்ஸ் ட்ரெயினிங், மற்றும் புரோட்டீன் அடிப்படையிலான டயட்டில் ஈடுபட்டு கடுமையாக உழைத்துள்ளார். இது வரை தனது படங்களுக்காக அவர் செய்த மிகப்பெரிய உடற்பயிற்சி இதுவே ஆகும்.
முந்தைய காலக்கட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில், நானி இதுவரை தோன்றியிராத ஒரு புதுமையான வேடத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்தின் பெயரான ‘ஜடல்’ அவரின் தனித்துவமான இரட்டை சிகை (twin braids) அலங்காரத்தில் இருந்து உருவானது.
தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் 2026ஆம் ஆண்டு மிகப் பெரிய பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘தி பாரடைஸ்’ திரைப்படம் 2026 மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் 8 மொழிகளில் வெளியாகிறது.
No comments:
Post a Comment