Featured post

Haiku Movie Review

Haiku Tamil Movie Review ஹாய் மக்களே! இன்னைக்கு நம்ம பார்க்கப்போற படம் Haiku. காதல், பிரிவு, வாழ்க்கையில் செய்யும் தவறுகள், இன்னொரு முறை காத...

Sunday, 7 September 2025

திரள்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் யோகி பாபு வெளியிட்டார்!

 "திரள்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் யோகி பாபு வெளியிட்டார்! 


S.M.தமிழினி புரொடக்சன்ஸ் கே.சசிகுமார், C.P.பிலிம்ஸ் ஆர்.சின்னசாமி இணைந்து தயாரிக்கும் 'திரள்' படத்தை மனோஜ் கார்த்தி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு அபி ஆத்விக், இசை ஏ.இ.பிரஷாந்த், எடிட்டிங் மனோஜ் கார்த்தி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.


ரவி பிரகாஷ், யுவன் மயில்சாமி, கிரி மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அல்பியா மீராராஜ் இருவரும் கதாநாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சேரன்ராஜ், சாப்ளின் பாலு, நித்தின், தமிழினி, வெங்கடேஷ் ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனீஷ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்!


க்ரைம், த்ரில்லர், ஆக்‌ஷனோடு, விறுவிறுப்பாக செப்டம்பர் 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது "திரள்"!


@GovindarajPro

No comments:

Post a Comment