Featured post

நிறைய ஆக்‌ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்வுப்பூர்வமான கதையாக 'தணல்' இருக்கும்" - இயக்குநர் ரவீந்திர மாதவா!

 *"நிறைய ஆக்‌ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்வுப்பூர்வமான கதையாக 'தணல்' இருக்கும்" - இயக்குநர் ரவீந்திர மாதவா!*...

Monday, 8 September 2025

ஹாட் பீட் " மூலம் அனைவரது இதயத்தையும் கொள்ளையடித்த நடிகர் சர்வா!!

 " ஹாட் பீட் " மூலம் அனைவரது இதயத்தையும் கொள்ளையடித்த நடிகர் சர்வா!!













நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆர்வம் காட்டும்  " ஹார்ட் பீட் " வெப் சீரீஸ் மூலம் பிரபலமான இளம் நடிகர் சர்வா!!


ஹார்ட் பீட் வெப் சீரிஸ் புகழ் சர்வா இப்போது  வெள்ளித்திரையில்  அசத்த ஆரம்பித்துள்ளார் !! 


ஹார்ட் பீட் வெப் சீரீஸில் குணா கதாபாத்திரம் மூலம் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதை கைப்பற்றிய இளம் நடிகர் சர்வா. இப்போது வெள்ளித்திரையில் கலக்க ஆரம்பித்துள்ளார். 


இரண்டு சீசன்கள், 200 க்கும் மேற்பட்ட எபிசோடுகளுடன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹார்ட் பீட்” வெப் சீரிஸ் மூலம், சர்வா தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயமான முகமாக மாறினார். ஹார்ட் பீட் சீரிஸ் நான்கைந்து படங்களில் நடித்த அளவு மிகப்பெரிய அனுபவத்தை தந்ததோடு, நண்பர்கள்,ரசிகர்கள் என்னை குணா என்று தான் அழைக்கிறார்கள். அது எனக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன் என்கிறார் நெகிழ்ச்சியோடு நடிகர் சர்வா.


சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றிருக்கும் சர்வா,  படிக்கும்போதே நாடகங்கள் நடிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார், தற்போது வெப் சீரிஸில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, தன் திறமையால் இப்போது வெள்ளித்திரையிலும் அசத்த ஆரம்பித்துள்ளார்.  “ஆர்.கே. நகர” மற்றும் “தமிழ் ராகர்ஸ்” போன்ற படைப்புகளில் முக்கிய கதாபாத்திரங்களில்  பாராட்டுக்களைக் குவித்துள்ளார். தற்பொழுது, அதர்வா நடிப்பில் இம்மாதம் 12ம் தேதி வெளியாக உள்ள “தணல்” படத்திலும் மிக முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


தனது நடிப்பு திறனை மேலும் சிறப்பாக்க, நெகட்டிவ் கதாபாத்திரங்களை கேட்டு வரும் சர்வா. “நல்ல நெகட்டிவ் ரோல்ஸ் கிடைக்கும்போது தான்,  நடிப்பின் பல பரிமாணங்களைக் காட்ட முடியும், நல்ல நெகட்டிவ் பாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 


ஒரு நல்ல இளம் திறமையாளராக, ஜொலிக்க ஆரம்பித்திருக்கும் சர்வாவிற்கு பல சினிமா வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளது.

No comments:

Post a Comment