Featured post

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும்

 கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம...

Monday, 3 February 2025

Blood, betrayal, and vengeance - Marco, the Pan-India action sensation, is set to

 *Blood, betrayal, and vengeance - Marco, the Pan-India action sensation, is set to thrill on Sony LIV from 14th Feb!*


After setting the box office on fire with its gripping action, intense drama, and stellar performances, Marco is now ready to storm the digital world. Following its sensational pan-India theatrical success, this high-octane thriller is coming to Sony LIV on 14th February in Malayalam, Telugu, Kannada, and Tamil.


Marco, the adopted son of the Adattu family, returns from exile after his brother’s brutal murder, discovering a deadly conspiracy led by the ruthless Russell Issac and his father, Tony. Thrust into a violent game of deception and betrayal, Marco’s quest for vengeance becomes a fight for survival. When the past won’t stay buried, how far will he go to end it?


Unni Mukundan said, _"Marco isn’t just an action film; it’s a journey through pain, betrayal, and an unrelenting love of a man towards his family. Every decision Marco makes is a matter of life and death, and every fight is a battle for his soul. The love we received in theatres worldwide was overwhelming, and I’m thrilled that audiences will now get to experience this raw, gripping story on Sony LIV."_


With breathtaking action sequences, Marco unapologetically explores violence, sparking thought-provoking discussions. Its technical brilliance shines through stylish cinematography, masterful slow-motion, and sharp editing. Marco is a thriller that tests the limits of one man's resilience, honor, and love for his family. Directed by Haneef Adeni, Marco is a visually stunning action spectacle featuring Siddique, Unni Mukundan, Jagadish, Abhimanyu Thilakan, Kabir Duhan Singh, and Anson Paul.


*Don’t miss the action phenomenon that captivated theatres; Marco is coming for you, streaming exclusively on Sony LIV from 14th February!*


Trailer link: 

https://youtu.be/TLEIhVc17jM?si=sZcDD7BjbbP8eZuE

Mei International Film Festival And vel Tech University & School Of Commerce

 *Mei International Film Festival And vel Tech University & School Of Commerce &  Friends Film Factory   இணைந்து நடத்திய மிக பிரம்மாண்டமான விருது வழங்கும் விழா*










31'st Jan 2025, 5000 மாணவர்களுக்கு மத்தியில் மிக கரகோசத்துடன் எழுச்சியாக நடந்த இவ்விழாவினை சிறப்பிக்க வந்த விருந்தினர்கள் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்குனர், சுசீந்திரன் இயக்குனர், பொன்ராம் ,ஒளிப்பதிவாளர்& இயக்குனர் செழியன், இயக்குனர்& நடிகர் ஆண்டனி பாக்யராஜ், பாட்டில் ராதா படத்தின் இயக்குனர் தினகரன் சிவபாலன் ,இசையமைப்பாளர் சத்யா ,சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் ,நடிகர் அப்பு குட்டி ,மற்றும் 2கே லவ் ஸ்டோரி படத்தின் பட குழுவினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் Mei International Film Festival  நான்காம் ஆண்டு வெற்றிகரமாக அடி எடுத்து வைக்கிறது இந்தியா மற்றும் உலக அளவில் இவ்விழாவில் கலந்து கொண்ட படங்கள் மொத்தம் 500 அதில் தேர்வு செய்து வெற்றி பெற்ற படங்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது இதன் இயக்குனர் செல்வராம் மற்றும் Jury தயாளன் [Director] , Jury ராகவன்[Director]. இவ்விழாவில் சிறப்பாக நடந்து முடிந்ததற்கு நமது Friends Film Factory  இயக்குனர்& தயாரிப்பாளர் ,விநியோகஸ்தர் M.P .கோபி, S.ஜெயசீலன்[Festival Producer] , P.அன்பழகன் [Festival CEO] அவர்களுக்கும் ,இவ்விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கும் விருது வழங்கி சிறப்பித்த சிறப்பு விருந்தினர்களுக்கும் மெய் இன்டர்நேஷனல் சார்பாக   நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

Sunday, 2 February 2025

Rockstar Anirudh Ravichander Comes On Board For Natural Star Nani, Srikanth Odela

 *Rockstar Anirudh Ravichander Comes On Board For Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas The Paradise!*



Natural Star Nani is all set to reunite with director Srikanth Odela and producer Sudhakar Cherukuri of Sri Lakshmi Venkateswara Cinemas (SLV Cinemas) for their highly anticipated second project together The Paradise, following the blockbuster success of Dasara. The new film, titled The Paradise, is set to go on floors soon. The pre-production works are in full swing, and Nani is also sweating out in gym to prepare for his character.


Rockstar Anirudh Ravichander is confirmed to score the music for the movie. The film marks the third time Nani and composer Anirudh have teamed up, continuing their successful partnership after the hits Jersey and Gangleader. Their past collaborations have delivered great musical success, and expectations are high for the upcoming project.


Nani's post reads: “We’re on our hat-trick :) This will be epic. #Paradise is N’Ani’Odela Film now. Welcome on board, dear @anirudhofficial ♥️”


In response, Anirudh shared, “This one is special. My dear @NameisNani and @odela_srikanth 💥💥💥 వెర్రిగా పోదాం ⚡️⚡️⚡️”


Srikanth Odela has crafted a powerful and larger-than-life story with an intense, gripping screenplay that promises to present Nani in an entirely new, mass-driven avatar. The actor will be playing his most intense and dynamic role yet.


Producer Sudhakar Cherukuri is fully invested in realizing this grand vision, ensuring that the film is made on a lavish scale. With a significant budget backing the project, this film is poised to become Nani’s most high-budget venture to date.


Details about the rest of the cast and crew will be revealed in due course.


Cast: Nani


Technical Crew:

Writer, Director: Srikanth Odela

Producer: Sudhakar Cherukuri

Banner: SLV Cinemas

Music: Anirudh Ravichander

PRO: Yuvraaj

Marketing: First Show

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி

 *நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும்   “தி பாரடைஸ்”  படத்தில் இணைந்துள்ளார்  ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் !!*



*நானி நடிக்கும் “தி பாரடைஸ்” படத்திற்கு இசையமைக்கிறார் ராக்ஸ்டார் அனிருத் !!* 



தசரா படத்தின்  பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நேச்சுரல் ஸ்டார் நானி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (SLV சினிமாஸ்) தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி ஆகியோருடன் மீண்டும் “தி பாரடைஸ்” எனும்  அதிரடி திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷீட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  நடிகர் நானி  இப்படத்தில்  தனது தோற்றத்திற்காக  ஜிம்மில் பயிற்சி எடுத்து வருகிறார்.


இந்தப் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. ஜெர்சி மற்றும் கேங்க்லீடர் வெற்றிகளுக்குப் பிறகு,  நானி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். அவர்களின் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் இசையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது, ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இது குறித்த சமூக வலைத்தள பதிவில் நானி கூறியுள்ளதாவது…: “நாங்கள் எங்கள் ஹாட்ரிக்கில் இணைந்துள்ளோம் :) இது அற்புதமான காவியமாக இருக்கும். #Paradise இப்போது N'Ani'Odela படம். அன்புள்ள @anirudhofficial ♥️ உங்களை வரவேற்கிறோம்”


இதற்கு பதிலளித்துள்ள அனிருத், “இந்த திரைப்படம் ஸ்பெஷலான ஒன்று. என் அன்பான @NameisNani மற்றும் @odela_srikanth 💥💥💥 லெட்ஸ் கோ கிரேஸி ⚡️⚡️⚡️ எனக்குறிப்பிட்டுள்ளார். 



ஸ்ரீகாந்த் ஒடேலா  இப்படத்திற்காக ஒரு சக்திவாய்ந்த மாறுபட்ட அழுத்தமிகு திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இப்படம் நானியை முற்றிலும் புதிய, வெகுஜன அவதாரத்தில் காட்டும். நடிகர் நானி  மிகவும் தீவிரமான மற்றும் ஆற்றல்மிக்க பாத்திரத்தில் நடிக்கிறார்.


தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி இப்படத்தின் திரைக்கதையில் ஈர்க்கப்பட்டு, மிகப்பெரும் பொருட்செலவில்,  பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படத்தை உருவாக்குகிறார்.  நடிகர் நானியின் திரை வாழ்க்கையில், மிக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இப்படம் இருக்கும். 


நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப  குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.


நடிகர்  : நானி


தொழில்நுட்பக் குழு: 

எழுத்து, இயக்கம் : ஸ்ரீகாந்த் ஒடேலா தயாரிப்பாளர்: சுதாகர் செருக்குரி 

பேனர்: SLV சினிமாஸ் 

இசை - அனிருத் ரவிச்சந்தர்

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் - ஃபர்ஸ்ட் ஷோ

பேபி & பேபி” திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா

 *“பேபி & பேபி” திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா !!*








யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப்  இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான காமெடிப்படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி”. 


ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் காமெடி கலாட்டா தான் இந்தப்படம். 


விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.



தயாரிப்பாளர் யுவராஜ் பேசியதாவது...

எனக்கு தொழில் சினிமா இல்லை, ஆனால்  சினிமா மீது  சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வம். இயக்குநர் பிரதாப் சொன்ன கதை,  எனக்கு மிகவும் பிடித்திருந்தது,  உடனே தயாரிக்கலாம் என இறங்கினோம். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு நல்ல படத்தை தமிழ்த்திரைத்துறைக்கு கொடுத்துள்ளோம் எனத் திருப்தியாக உள்ளது. இமான் சார் அற்புதமாக இசையமைத்துள்ளார். அவருக்கு இப்படத்தில் இசை வள்ளல் எனப் பட்டம் தந்துள்ளோம். ஜெய் சார், சத்யராஜ் சார், யோகிபாபு சார் என எல்லோரும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். வெளியிலிருந்து பார்க்க சினிமா ஈஸியாக தெரிகிறது. திரைத்துறைக்குள் வந்த பின் தான், இங்குள்ள கஷ்டம் தெரிகிறது. பிரதாப் சொன்ன கதையால் தான் இந்தப்படம் நடந்தது. அவருக்கு நன்றி.  பிப்ரவரி 14 ஆம் தேதி இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். புதிதாக உங்களை நம்பி திரைக்கு வந்துள்ளோம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகை பாப்ரி கோஷ் பேசியதாவது...

நான் தொலைக்காட்சியில் நடித்து வந்தேன். இந்தப்படத்தில் சத்யராஜ் சாருக்கு  மகளாக நடித்துள்ளேன். அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். யோகிபாபு சாருடன் விஸ்வாசம் படத்திலேயே நடித்துள்ளேன். இப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. கீர்த்தனா மேடமுடன் ஷூட்டிங்க் ஸ்பாட் ஜாலியாக இருந்தது. ஜெய்,  பிரக்யா நிறைய ஆதரவு தந்தார்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது.


நடிகர் பழைய ஜோக் தங்கதுரை பேசியதாவது...

கண்ணுக்கு மையழகு இந்தப்படத்துக்கு ஜெய் அழகு, எங்கேயும் எப்போதும் படத்தில் அவருடன் நடித்தேன், இப்போது தான் மீண்டும் நடித்துள்ளேன் நன்றி. தெலுங்குல மகேஷ்பாபு மாதிரி, தமிழுக்கு யோகிபாபு, அவர் மாஸாக நடிப்பார் இவர் கிளாஸாக காமெடியில் அசத்துவார். சத்யராஜ் சார்  எல்லா கேரக்டரிலும் அசத்திவிடுகிறார். நிறைய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மொட்டை ராஜேந்திரன் சாருடன் எனக்கு காம்பினேசன் காட்சிகள்,  ஜாலியாக வந்துள்ளது. எல்லா தொழில் நுட்ப கலைஞர்களும், கடினமாக உழைத்துள்ளனர். எல்லோரும் பேபியோட ஹேப்பியா பார்க்க கூடிய படம். அனைவரும் வந்து படம் பாருங்கள் நன்றி. 


நடிகை கீர்த்தனா பேசியதாவது, 

பேபி பேபி எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு, தயாரிப்பாளருக்கு நன்றி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்துள்ளேன், முதலில் ஜெய் அம்மா என்றவுடன் தயங்கினேன், சத்யராஜ் சாருக்கு  ஜோடி என்றவுடன் ஒகே சொல்லிவிட்டேன். எனக்கு நல்ல கேரக்டர், பேபியை வைத்து அழகாக கதை சொல்லியுள்ளார்கள். பிரதாப்புக்கு நன்றி. 


இசையமைப்பாளர் இமான் பேசியதாவது...

இசை வள்ளல் டைட்டில் கொஞ்சம் ஓவர் தான், அன்பால் தந்துள்ளார்கள் நன்றி. இப்படம் ஆரம்பிக்கும்போது இருந்த பாஸிடிவிடி படம் முழுக்க இருந்தது. படம் முழுக்க நிறைய நட்சத்திரங்கள்,  இத்தனை பெரிய நடிகர்கள் முதல் படத்தில் கிடைப்பது அரிது. அதை மிகச்சரியாகப் பயன்படுத்தி, அனைவரும் கொண்டாடும் வகையில்,  சிரித்து மகிழும் படமாகத் தந்துள்ளார் பிரதாப். யோகிபாபுவை கேரக்டர் ரொலில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. ஜெய் அவர் பாத்திரத்தை மிக அருமையாகச் செய்துள்ளார். சினிமாவில் புதிதாகத் தயாரிப்புக்கு வருவது எளிதல்ல. யுவராஜ் சாருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றியடையவும், அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி. 


நடிகர் விஜய் ஆதிராஜ் பேசியதாவது...

சத்யராஜ் சார் புரட்சித் தமிழன் இல்லை, இனிமேல் அவர் பான் இந்தியன் ஸ்டார்.  சத்யராஜ் சாருடன் இரண்டு படங்கள் செய்யும் ஆசீர்வாதம் எனக்குக் கிடைத்தது நன்றி. இங்கு அவரைப் பார்த்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் யுவராஜ் சமீபத்தில் தான் பழக்கம். படம் மிக நன்றாக வந்துள்ளது என்றார்.  பிரதாப்புக்கு என் வாழ்த்துக்கள். யோகிபாபு மின்னும் ஸ்டார் எங்கு பார்த்தாலும் அவர் முகம் தான். ஜெய் இன்னும் நிறையப் படங்கள் நடிக்க வேண்டும். பேபி & பேபி படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள். 



இயக்குநர் பிரதாப் பேசியதாவது...

இந்தக்கதையை எழுதியவுடன் யோகிபாபு சாரிடம் தான் முதலில் போனேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. பின் பல தயாரிப்பாளர்களிடம் போனேன், இறுதியாக யுவாராஜ் சாரை சந்தித்தேன். அவர் கதை கேட்டு, மிகவும் ஆர்வமாகி இந்த கதாப்பாத்திரத்துக்கு இவரை போடலாம், அல்லது இவரைப் போடலாம் என,  அவர் தான் எல்லா நடிகர்களையும் ஒருங்கிணைத்தார். நான் தான் பட்ஜெட் பற்றிக் கவலைப்பட்டேன். இந்தக்கதையை  சத்யராஜ் சாரிடம் சொன்னதும் அவர் ஒத்துக்கொண்டார்,  அவர் படத்திற்குள் வந்ததும் படமே மாறிவிட்டது. ஜெய் சார் இப்படத்திற்காக அவ்வளவு உழைத்தார். ரம்ஜான் நோம்பினில் மூன்று வேளை சாப்பிடாமல் நடித்தார். யோகிபாபு சார்,  அவர் தான் இந்தப்படம் நடக்கக் காரணம். கீர்த்தனா மேடம் முதலில் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்றார் ஆனால் சத்யராஜ் சார் ஜோடி என்றதும் உடனே ஓகே சொல்லிவிட்டார். பிரக்யா நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். ஒளிப்பதிவாளர் மிக அருமையாகச் செய்து தந்துள்ளார். நான் இமான் சார் இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன், தயாரிப்பாளரும் அவரையே சொன்னார். அவர் கதை கேட்டு உடனே ஒத்துக்கொண்டார்.  அவர் இசையில் எல்லாப்பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். கண்டிப்பாக இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும். படம் நன்றாக எடுத்துள்ளோம்.



நடிகர் யோகிபாபு பேசியதாவது....

இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த பிரதாப் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. பிரதாப் 17 வருட  நண்பர். 17 வருடம் முன்பு  ஒரு படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளோம். இன்னக்கி அவர் இயக்குநர்,  நான் காமெடி நடிகன்.  நாம் உண்மையாக உழைத்தால் நமக்கானது தானாக வந்து சேரும். இந்தப்படம் மிக நல்ல அனுபவம். சத்யராஜ் சாருடன் எப்போதும் கவுண்டமணி சார் பற்றி பேசி சிரிப்போம்.  ஜெய் இன்னும் எப்படி இளைமையாகவே இருக்கிறீர்கள் எனக்கேட்டேன், அவர் சிங்கிளா இருப்பதால் யங்கா இருக்கேன் என்றார். சீக்கிரம் அங்கிளா ஆகிவிடப்போகிறீர்கள், கல்யாணம் செய்து கொள்ளுங்கள். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகர் சத்யாராஜ் பேசியதாவது...

இந்தப்படம் மிக மிக நல்ல அனுபவமாக இருந்தது. இப்படத்தில் நிறைய நடிகர்கள், ஆனால் இத்தனை பேரை ஒருங்கிணைத்து மிக அழகாக எடுத்துள்ளார்கள். தயாரிப்பாளர் எளிமையாக அவரது மொழியில் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படித்தான் நமக்கு வரும் மொழியில் பேச வேண்டும். நானும் ஜெய்யும் இன்னொரு பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கிறோம். ராஜா ராணி வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. பார்டி படம் இன்னும் வரவில்லை, மதகதராஜா போல் அந்தப்படம் வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப்படத்தில் அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்த கீர்த்தனா எனக்கு ஜோடி.  நாமளும் இன்னும் இளைஞர் தான். தயாரிப்பாளர் அப்பாவி போல் இருந்தாலும், ரொம்பவும் விவரமானவர். பிரதாப் இத்தனை நடிகர்களை வைத்து, வெகு அழகாக வெகு சீக்கிரமாக திட்டமிட்டுப் படத்தை எடுத்துள்ளார் வாழ்த்துக்கள். நானும் இப்படத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் நன்றி. 



நடிகர் ஜெய் பேசியதாவது...

இயக்குநர் கதை சொல்ல வந்த போது, சத்யராஜ் சார், யோகிபாபு டார்லிங் எல்லாம் ஓகே சொல்லிவிட்டார்கள் என்றவுடனே நானும் ஒகே சொல்லிவிட்டேன். ஷூட்டிங்கில் பட்டினியாக நடித்தது கஷ்டமாகத் தெரியவில்லை.  பட ஷூட்டிங்கில் சத்யராஜ் சார், யோகிபாபு என எல்லோரும் வயிறு வலிக்க வலிக்கச் சிரிக்க வைத்து விடுவார்கள் அது தான் கஷ்டமாக இருக்கும். இயக்குநர் பக்காவாக திட்டமிட்டு எடுத்தார்,  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெரிய ஆர்டிஸ்ட் இருப்பார்கள், ஆனால் அதை மிக அழகாக எடுத்துள்ளார். இரத்தம் வெட்டுக் குத்து இல்லாமல், மனம் விட்டுச் சிரித்து மகிழும் படமாக இப்படம் இருக்கும்.  பார்த்து விட்டுச் சொல்லுங்கள் நன்றி.

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'ஆர் பி எம் ' ( R P M )படத்தின்

 *'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'ஆர் பி எம் ' ( R P M )படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர்*




*நடிகர் டேனியல் பாலாஜி நடித்த 'ஆர் பி எம்' ( R P M) படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு*


தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு 'ஆர் பி எம் ' ( R P M )என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான மோஷன் போஸ்டரை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.


'தி சவுண்ட் ஸ்டோரி' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆர் பி எம் ' ( R P M) எனும் திரைப்படத்தில் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொள்ள சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார். படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் தாமரை மற்றும் மோகன் ராஜன் எழுத, பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீ ராம் பாடியிருக்கிறார். இதனுடன் படத்தின் தயாரிப்பாளரான கல்பனா ராகவேந்தர் 'புரோக்கன் ஆரோ..' எனும் ஆங்கில பாடலுக்கு முதல் முறையாக இசையமைத்து, பாடல் எழுதி பாடியிருக்கிறார். கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார். பிரசாத் பிரபாகர் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாத் பிரபாகர் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.  


படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' நடிகர் டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் இது. இதில் அவர் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் நடித்திருந்ததை போல், அழுத்தமான வேடத்தில் நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லராக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறேன்'' என்றார். 


தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. விரைவில் படத்தின் டீசர் ,ட்ரெய்லர் ஆகியவை வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.


https://x.com/VijaySethuOffl/status/1885674464115134603?t=NJ5KrGf1J1V3RW4sXHHNzg&s=08

Saturday, 1 February 2025

திரையுலக வரலாற்றில் முதன்முறையாக 75 இயக்குநர்கள் & முன்னணி நட்சத்திரங்கள்

 *திரையுலக வரலாற்றில் முதன்முறையாக 75 இயக்குநர்கள் & முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட ‘அஸ்திரம்’ பட டிரைலர்.*




*நடிகர் ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ பட டிரைலர் வெளியானது.*


பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல குறும்படங்களை இயக்கி நடித்த அனுபவம் பெற்றவர். 


‘அஸ்திரம்’ படத்தில் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும்  அறிமுக நடிகர் ரஞ்சித் DSM உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இதன் கதை,திரைக்கதையை எழுதியுள்ளார் கதாசிரியர் ஜெகன். த்ரில்லர் பாணியில் இந்த படம் விறுவிறுப்பான துப்பறியும் படமாக உருவாகியுள்ளது.


இந்தநிலையில் தமிழ் சினிமாவில் சாதனைகள் பல செய்த சீனியர் இயக்குநர்கள் முதல் சமீப காலமாக சின்ன சின்ன படங்களில் கூட தங்களது முத்திரைகளை அழுத்தமாக பதித்து வரும் இளம் இயக்குநர்கள் வரை மொத்தம் 75 பேரும்,   தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய்சேதுபதி, விஷால், ஆர்யா, சரத்குமார், அருண்விஜய் மற்றும் யோகி பாபு என 6 பேரும் இன்று (ஜன-31) மாலை 6:04 மணிக்கு இந்த படத்தின் டிரைலரை ஒரே நேரத்தில் வெளியிட்டனர். சினிமா வரலாற்றிலேயே இப்படி இத்தனை பிரபலங்கள் ஒரு படத்தின் டிரைலரை ஒன்றிணைந்து வெளியிடுவது என்பது இதுவே முதன்முறை. 


இந்த டிரைலர் வெளியீடு குறித்து ‘அஸ்திரம்’ பட இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூறும்போது, 

“ 'அஸ்திரம்’ படத்தை வெகு ஜன மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு புதிய முயற்சியாக இந்த டிரைலர் வெளியீட்டை நடத்த முடிவு செய்தோம். அதற்காக நாங்கள் பல இயக்குனர்களை அணுகியபோது அனைவருமே எந்த மறுப்பும் சொல்லாமல் எங்களுக்கு அன்புடன் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். அது மட்டுமல்ல படத்தின் டிரைலரை பார்த்த பெரும்பாலான இயக்குநர்கள் இந்த படம் நடிகர் ஷாமுக்கு இரண்டாவது இன்னிங்ஸை துவக்கி வைக்கும் படமாக இருக்கும் என உறுதிபட கூறினார்கள்.


மேலும் நடிகர் ஷாமும் இந்த படம் உருவாகியுள்ள விதம் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார். வரும் பிப்ரவரி இறுதி வாரத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  என்று கூறியுள்ளார்.


பார்க்கிங், மகாராஜா, கருடன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை வெளியிட்ட பைவ் ஸ்டார் நிறுவனம் ‘அஸ்திரம்’ படத்தை தமிழகமெங்கும் வெளியிட இருக்கிறது..


ஐரா, எட்டு தோட்டாக்கள், பொம்மை நாயகி ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.


விரைவில் வெளியாக உள்ள ரேஞ்சர், ஜாக்சன் துரை 2 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.


இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களில் துணை படத்தொகுப்பாளராக பணியாற்றிய பூபதி இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார்.


கலை வடிவமைப்பை ராஜவேல், சண்டை பயிற்சியாளராக முகேஷ் பொறுப்பேற்றுள்ளார்கள்.


*மக்கள் தொடர்பு ; A.ஜான்*

குடும்பஸ்தன்’ நன்றி தெரிவிக்கும் விழா!

 *’குடும்பஸ்தன்’ நன்றி தெரிவிக்கும் விழா!*







சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. 


நிகழ்வில்  இயக்குநர் சக்திவேல் பாலாஜி பேசியதாவது, “நக்கலைட்ஸ் அணியின் மாபெரும் வெற்றிப்படம் இது. அவர்களுக்கும் இது தேவையான விஷயம். அவர்கள் சினிமாவுக்கு வந்து ஜெயித்திருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’, ‘குடும்பஸ்தன்’ இந்த இரண்டு படங்களும் எளிய முறையில் பல அழுத்தமான விஷயங்களை படமாக்கி ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கிறது. கருத்தாக சொல்லாமல் வாழ்வியலையும் சேர்த்து சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி. மணிகண்டன் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மொழி தெரியாமல் கதாநாயகியும் சிறப்பான முகபாவனைகளைக் கொண்டு வந்திருக்கிறார். மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். வெகுஜனம் ஏற்றுக்கொள்ளும்படியான படம் இது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார். 


நடிகை சான்வே மேக்னா, “என்னுடைய முதல் படத்திற்கே இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருடனும் இன்னும் 100 படங்கள் நடிக்க விரும்புகிறேன். ஹைதரபாத்திலும் சீக்கிரம் படம் வெளியாக இருப்பதை எதிர்பார்த்திருக்கிறேன். என் கதாபாத்திரத்தை போல மனைவி வேண்டும் என பலரும் சொல்லியிருந்தார்கள். பணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமில்லை என்பதை இந்தப் படம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி”.


தயாரிப்பாளர் வினோத், “ஹீரோவில் இருந்து இயக்குநர் வரை என் படக்குழுவினர் எல்லோருக்கும் நன்றி” என்றார்.


எழுத்தாளர் பிரசன்னா பாலச்சந்திரன், “நக்கலைட்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. ஓயாத இயந்திரத்தைப் போல எங்கள் பின்னால் அணி ஓடிக் கொண்டிருந்தது. நக்கலைட்ஸ் ஆரம்பித்த இந்த எட்டு வருடங்களில் எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. யூடியூபில்தான் நாங்கள் சினிமாவுக்கான பயிற்சியே எடுத்தோம். ’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை. அனைவருக்கும் நன்றி”.


இசையமைப்பாளர் வைசாக், "ராஜேஷ் சாருக்கு நன்றி. மக்களிடம் நிச்சயம் நல்ல படமாக போய் சேரும் என்ற நம்பிக்கையுடன் உழைத்த படம் இது. படக்குழு அனைவரும் சிறப்பாக வேலை பார்த்துள்ளனர். இதற்கான பலன் தான் இந்த சக்சஸ் மீட். எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், குடும்பத்திற்கு நன்றி".


திங்க் மியூசிக் சந்தோஷ், " இந்த வருடம் ஆரம்பித்திருக்கும் போது 'குடும்பஸ்தன்' படம் வார்ம் வெல்கமாக வந்திருக்கிறது. மணிகண்டனுடன் எங்களுக்கு நான்காவது படம். தனியிசைக் கலைஞராக இருந்து வைசாக் இசையமைப்பாளராகவும் அருமையாக இசை செய்திருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்". 


இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, "படம் பார்த்து கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி. நக்கலைட்ஸ் குழுவுக்கு நன்றி. எங்கள் முதல் படத்தை இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி". 


நடிகர் மணிகண்டன், " இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்த குறுகிய காலத்திலேயே எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. படம் வெளியான பின்பும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படக்குழுவினர் நாங்கள் அனைவரும் எளிய பின்னணி கொண்டவர்கள். படம் எடுப்பது தனி போராட்டம் என்றாலும் எடுத்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பது பெரிய போராட்டம். அந்த மலை போன்ற போராட்டத்தை பனி போல எளிமையாக ஆக்கி கொடுத்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. எங்களை சரியான விதத்தில் வழிநடத்திய சுரேஷ் சந்திரா சாருக்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நன்றி" என்றார்.

வீரப்படை ஆண்ட வீரா வெற்றிக்குப் பிறந்த தீரா

 வீரப்படை ஆண்ட வீரா வெற்றிக்குப் பிறந்த தீரா 

மக்களுக்காக வாழ்ந்தாயே மாவீரா



சோழர் வழி வந்த சூரா

சூழ்ச்சி அழிக்கின்ற மாறா 

மக்களை மறந்து மறைந்தாயே 

மாவீரா


 -"கவிப்பேரரசு" வைரமுத்து 


மண்ணையும் மானத்தையும் காத்த எங்கள் மாவீரனே!

மனிதராக பிறந்தவர் எவராக இருந்தாலும் "படையாண்ட மாவீரா"வில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதி மெல்லிசை நாயகன் 

ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் மெட்டமைத்து இசைத்து சகோதரி சைந்தவி அவர்கள் பாடிய இந்தப் பாடலைக் கேட்டால் உயிரை உலுக்கி கண்களில் கொப்பளித்த கண்ணீர் கண்ணங்களில் வழிந்தோடி நெகிழ்வோடு நெஞ்சினை நனைக்கும்.


அறம் சுமந்த உனது வாழ்வியலை இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு இச்சமூகம் பேசிப் பேசி உனது  புகழ் பாடும்.


எங்கள் படையாண்ட மாவீரனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.


பேரன்போடு,

வ. கௌதமன்

எஸ்.கிருஷ்ணமூர்த்தி

பி.எஸ்.எஸ்.ராஜா நிர்மல்

இ.குரலமுதன்

யு.எம்.உமாதேவன்

கே.பாஸ்கர்

கு.பரமேஸ்வரி

மற்றும்

விகே புரடக்க்ஷன்ஸ்

தயாரிப்பு குழுமம்.