Featured post

மக்கள் சிறு முதலீட்டுப் படங்களைப் பார்க்கப் பயப்படுகிறார்கள்: 'ப்ராமிஸ்' பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

 மக்கள் சிறு முதலீட்டுப் படங்களைப் பார்க்கப் பயப்படுகிறார்கள்: 'ப்ராமிஸ்' பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!  ரீ ரிலீஸ் படங்களால் ...

Saturday, 3 February 2024

உலகில் முதல் முறையாக வாலிபால் விளையாட்டை வைத்து

 உலகில் முதல் முறையாக வாலிபால்

விளையாட்டை வைத்து

வரும் படம்






எப்போதும் ராஜா. ( பாகம் 1 )


அண்ணன் தம்பியாக விண்ஸ்டார் விஜய் முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆறு பாடல் காட்சிகள், ஆறு சண்டை காட்சிகள் சிரிப்பு செண்டிமெண்ட் பாசம் என மக்களுக்கு பிடித்துள்ள ஜனரஞ்சகமான படமாக அமைந்துள்ளது.


விண்ஸ்டார் விஜய்யுடன் ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார், பிரியா,டெப்ளினா, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


இப்படம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது.


எப்போதும் ராஜா பாகம் 1 படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் விண்ஸ்டார் விஜய் தெரிவித்தாவது...


இந்த படம் தணிக்கை குழு 27 கட் கொடுத்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக கைப்பந்து விளையாட்டை கதைக்களமாக கொண்டு தயாரிக்கப்பட்டிக்கிறது.


இந்த படத்தில் சாதாரண மனிதன் சாதனை படைக்க போராடுவது தான். படத்தின் திரைக்கதை ஆரம்பத்தில் தமிழ்நாடு வாலிபால் சாம்பியன் ஆக அறிமுகம் ஆகி இந்திய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற முயற்சி செய்கிறேன். இதில் பல பிரச்சனைகளை சந்தித்து எப்படி வெற்றி பெற்றான் என்பதே படத்தின் கதை என்கிறார்.


இந்த படம் உலகமெங்கும் பிப்ரவரி 16 அன்று திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.


தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்


(9940259469)


PRO - Ramajeyam

No comments:

Post a Comment