Featured post

Brand Blitz Entertainment presents* *Filmaker Bharath Mohan’s directorial

 *Brand Blitz Entertainment presents*  *Filmaker Bharath Mohan’s directorial* *Shanthu Bhagyaraj’s “Magenta” Teaser explores life and emotio...

Sunday, 4 February 2024

கதையின் நாயகனானவும், காமெடியனாகவும் நடிப்பேன்

 கதையின் நாயகனானவும், காமெடியனாகவும் நடிப்பேன்!

---அப்புக்குட்டி


அழகர்சாமியின் குதிரை படத்தில் கதையின் நாயகனாக நடித்து, தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, தற்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அதில் 'வாழ்க விவசாயி', 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்' இரண்டு படங்களும் விரைவில் வெளிவர உள்ளது.


வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை, வெந்து தணிந்தது காடு, என தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 


பால்டிப்போ கதிரேசன் தயாரிப்பில், பொன்னி மோகன் இயக்கியுள்ள வாழ்க விவசாயி படத்தில், கதையின் நாயகனாக , விவசாயியாக வாழ்ந்து, நடித்துள்ள அப்புக்குட்டிக்கு மீண்டும் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அப்புக்குட்டி ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார்.


ராஜூ சந்திரா இயக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் படத்தில் கதையின் நாயகனாக அப்புக்குட்டி மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். 


கதையின் நாயகனாக நடிப்பது தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறும் அப்புக்குட்டி, ரஜினி, விஜய் படங்களில் காமெடி செய்யவும் விருப்பம் தெரிவிக்கிறார்!


@GovindarajPro

No comments:

Post a Comment