*'நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்' அவரது பிறந்தநாளான நவம்பர் 18 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!*
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல்துறை நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாராவின் வாழ்க்கையில் அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், சினிமாவில் அவரது வெற்றிமுகம், திருமணம் ஆகியவை குறித்து இந்த டாக்குமெண்ட்ரி எடுத்துரைக்க இருக்கிறது. அவரது பிறந்தநாளான நவம்பர் 18 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் எக்ஸ்க்ளூசிவாக இது ப்ரீமியராகிறது.
தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் வெளியில் பகிர்ந்திடாத நடிகை நயன்தாராவின் இதுவரை கண்டிராத அழகிய பக்கத்தை இந்த டாக்குமெண்ட்ரியில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். தங்கள் கனவுகளையும் இலக்குகளையும் அடைய நினைப்பவர்களுக்கான உத்வேகமாக இந்த டாக்குமெண்ட்ரி இருக்கும். மகளாக, சகோதரியாக, வாழ்க்கைத் துணையாக, அம்மாவாக, தோழியாக, தொழில்துறையில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக அவரது பல முகங்களை இந்த டாக்குமெண்ட்ரியில் பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் உள்ள நயன்தாரா ரசிகர்களுக்கு சிறந்த பிறந்தநாள் பரிசை நெட்ஃபிலிக்ஸ் தருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நவம்பர் 18 அன்று ’நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ வெளியாகிறது.
*நெட்ஃபிலிக்ஸ் பற்றி:*
நெட்ஃபிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190க்கும் மேற்பட்ட நாடுகளில் 283 மில்லியன் சந்தாதாரர்கள் டிவி சீரிஸ், திரைப்படங்கள் மற்றும் கேம்களை பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தாங்கள் விரும்பும் நேரங்களில் அனுபவிக்கின்றனர்.
No comments:
Post a Comment