Featured post

Power Star Pawan Kalyan’s Epic Period Action Film Hari Hara Veera Mallu Part-1

 Power Star Pawan Kalyan’s Epic Period Action Film Hari Hara Veera Mallu Part-1: Sword vs Spirit Enters Final Leg of Shooting Power Star Paw...

Monday, 4 November 2024

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் அங்கமான பிங்க் ரிகார்ட்ஸ் வழங்கும் கேபிஒய்

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் அங்கமான பிங்க் ரிகார்ட்ஸ் வழங்கும் கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் 'ராக்காயி'*






*கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் தயாரிப்பில் விர்ச்சுவல் செட் புரொடக்ஷன் தொழில்நுட்பத்தில் பாடல் உருவாக்கம்*


இந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. யுவன் 360 நிகழ்ச்சி அதன் சமீபத்திய மைல்கல் ஆகும். 


நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் அதன் அடுத்த படைப்பாக நிறுவனத்தின் ஒரு அங்கமான பிங்க் ரிகார்ட்ஸ் (Ping Records) வாயிலாக 'ராக்காயி' என்ற பாடலை வழங்குகிறது. கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் இதை இணைந்து தயாரித்துள்ளனர். தொலைக்காட்சி பிரபலமான கேபிஒய் பாலா மற்றும் நட்சத்திர தம்பதிகள் சேத்தன், தேவதர்ஷினியின் மகளான '96' திரைப்பட புகழ் நியதி முதன்மை வேடங்களில் இதில் தோன்றுகின்றனர். 


கலகலப்பான காதல் பாடலான 'ராக்காயி' ஏ.கே. பிரியன் இசையிலும், மு.வி. பாடல் வரிகளிலும் உருவாகியுள்ளது. நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான கார்த்திக் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை தளபதி விஜய் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியான 'கோட்' திரைப்படத்தில் ஸ்பார்க் பாடலை பாடிய வ்ருஷா பாலு உடன் இணைந்து பாடியுள்ளார். 


இப்பாடலை விர்ச்சுவல் செட் புரொடக்ஷன் டெக்னாலஜி எனும் அதி நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு அபு மற்றும் சல்ஸ் இயக்கி நடனம் அமைக்க, பிரம்மாண்ட பொருட்செலவில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் தயாரித்துள்ளனர். 


விர்ச்சுவல் புரொடக்ஷன் சினிமாவில் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்றும் என ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் கூறியது போல் இந்த நவீன தொழில்நுட்பத்தை 'ராக்காயி' குழுவினர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


உற்சாகமூட்டும் காதல் பாடலான 'ராக்காயி' பிங்க் ரிக்கார்ட்ஸ் யூடியூப் பக்கத்தில் இன்று (நவம்பர் 4) வெளியாகிறது. இப்பாடல் இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெறும் என்று நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் மற்றும் பிங்க் ரிகார்ட்ஸ் குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 


***



No comments:

Post a Comment