நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், மெகாஹிட் "ஏ.ஆர்.எம்" திரைப்படம், நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வரும் நவம்பர் 8 முதல், மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், மலையாள சினிமா வரலாற்றில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக வெளியாகி வெற்றி பெற்ற, "ஏ.ஆர்.எம்" திரைப்படத்தை, ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இயக்குநர் ஜிதின் லால் இயக்கியுள்ள இப்படத்தை, மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில், டாக்டர். ஜகாரியா தாமஸ் உடன் இணைந்து லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளார்.
டோவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி, சுரபி லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ், பாசில் ஜோசப், சஞ்சு சிவராம், ஹரிஷ் உத்தமன், ரோகினி, ஜெகதீஷ், அஜு வர்கீஸ், சுதீஷ் மற்றும் பிஜு குட்டன் ஆகியோர் நடித்துள்ள இந்த ஃபேன்டஸி திரைப்படம், அமானுஷ்யம் சூழ்ந்த சிலையின் பின்னணியில், மூன்று தலைமுறைகளின் கதையைச் சொல்கிறது. ஏ.ஆர்.எம் ஒரு விண்கல் மற்றும் ஒரு பழங்கால கோயில் விளக்கைச் சுற்றியுள்ள மர்மங்களை விரிவுபடுத்துகிறது, போர்வீரன் குஞ்சிகேலு, திருடன் மணியன் மற்றும் அஜயன் ஆகிய மூன்று மையக் கதாபாத்திரங்களின் பயணங்களைச் சிக்கலான முறையில் இது இணைக்கிறது. மூன்று தலைமுறை பாத்திரங்களில் டோவினோ தாமஸால் வித்தியாசமான தோற்றங்களில் அசத்தியுள்ளார்.
படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜான் படம்பிடித்துள்ளார், ஷமீர் முகமதுவின் எடிட்டிங் மற்றும் திபு நினன் தாமஸின் பரபரப்பான இசையமைப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும் இந்த மாயாஜால ஃபேன்டஸி த்ரில்லரான ஏ.ஆர்.எம் - திரைப்படத்தைக் காணத் தவறாதீர்கள்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.
No comments:
Post a Comment