Featured post

Delhi Sharks Clinch Title !!!!

Delhi Sharks Clinch Title !!!!   Delhi Sharks emerged victorious at the DAVe BABA VIDYALAYA Tamil Nadu Open Trios Tenpin Bowling Tournament ...

Wednesday, 6 November 2024

ஹர்பஜன் சிங்' நடித்து தமிழில் அடுத்து உருவாகும் திரைப்படமான

 *'ஹர்பஜன் சிங்' நடித்து தமிழில் அடுத்து உருவாகும் திரைப்படமான 'சேவியர்' விரைவில் வெளியாகவுள்ளது* 






ஷான்டோவா ஸ்டுடியோ 2019-இல் அக்னி தேவி மற்றும் 2021-இல் 'ஃப்ரெண்ட்ஷிப்' ஆகிய திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் சார்பில் 'ஜான் பால்ராஜ்' தயாரித்து இயக்கும், 'ஃப்ரெண்ட்ஷிப்' படத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானும், தற்போதைய நாடாளுமன்ற  மாநிலங்களவை உறுப்பினருமான 'ஹர்பஜன் சிங்' கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்திற்கு 'சேவியர்' என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிமுகமும் சமூக வலைதளங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக இன்று மாலை 05:00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.


இத்திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் 'டாக்டர்.ஜேம்ஸ் மல்ஹோத்ரா' மற்றும் ஓவியா 'வர்ணா' என முக்கியமான கதாபாத்திரத்திரங்களில் நடிக்கின்றனர். GP முத்து 'முத்து மாமா' மற்றும் வி டி வி கணேஷ் அவர்கள் 'கடப்பார கணேசன்' என்ற நகைச்சுவை கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க உள்ளனர்.


இத்திரைப்படம் ஒரு மருத்துவமனையில் நிகழும் திரில்லரான, நகைச்சுவை கலாட்டாவுடன், 

திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது. கதாபாத்திரங்கள் அறிமுகத்தின் மூலம் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதியாகிறது.


இத்திரைப்படத்திற்கு DM உதயகுமார்(டிகே) இசையமைக்க, மாணிக் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.


கோஜோ படத்தொகுப்பாளராகவும், விமல் ராம்போ சண்டைப் பயிற்சி இயக்குனராகவும், SV பிரேம்ஆனந்த் கலை இயக்குனராகவும், ஸ்ரீ செல்வி நடன இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர்.


விக்ன ஜான் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ராபின், அஜ்மீர் ஷாகுல், விவேக் வின்சென்ட் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகவும், செந்தில் குமார், MS ஸ்டாலின் மற்றும் GK பிரசன்னா இணைத்தயாரிப்பாளர்களாராக பணிபுரிகின்றனர்.


 *நடிகர்கள்:-* 


ஹர்பஜன் சிங்

ஓவியா

வி டி வி கணேஷ்

ஜி பி முத்து


 *படக்குழு:-* 


தயாரிப்பபாளர் மற்றும் இயக்குனர்: ஜான் பால் ராஜ்

தயாரிப்பு: ஷான்டோவா ஸ்டுடியோ

இசையமைப்பாளர்: உதயகுமார் (DK) 

ஒளிப்பதிவாளர்: மாணிக்

படத்தொகுப்பாளர்: கோஜோ

சண்டைப் பயிற்சி இயக்குனர்: விமல் ராம்போ

கலை இயக்குநர்: எஸ் வி பிரேம் ஆனந்த்

தயாரிப்பு வடிவமைப்பாளர்: விக்னா ஜான்

நிர்வாக தயாரிப்பாளர்கள்: ராபின், அஜ்மீர் ஷகீல், விவேக் வின்சென்ட்

இணை தயாரிப்பாளர்கள்: செந்தில் குமார், எம் எஸ் ஸ்டாலின், ஜி கே பிரசன்னா

மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத் (V4U Media)

No comments:

Post a Comment