Featured post

Hotstar Specials Police Police to Stream from September 19 on JioHotstar

 Hotstar Specials Police Police to Stream from September 19 on JioHotstar New promo reveals launch date; introduces Shabana Shahjahan as law...

Thursday, 13 March 2025

நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம் அறிமுகம்: மைதானத்திற்கு உள்ளேயும்

 *நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம் அறிமுகம்: மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு கிரிக்கெட் வீரர் எப்படியான சவால்களை எதிர்கொள்கிறார் என்பதை சித்தார்த்தின் அர்ஜூன் கதாபாத்திரம் சொல்கிறது!*



நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கும் ’டெஸ்ட்’ படத்தில் நடிகர் சித்தார்த்தின் அர்ஜூன் கதாபாத்திர அறிமுக வீடியோவை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் வெளியிட்டுள்ளார். 


சிலருக்கு கிரிக்கெட் ஒரு விளையாட்டு, பலருக்கு அது ஒரு ஆர்வம். ஆனால், அர்ஜுனுக்கு அது வாழ்க்கை! திறமையான நடிகரான சித்தார்த் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  அவரது கிரிக்கெட் வீரர் கதாபாத்திரம் லட்சியம், தியாகம் மற்றும் இடைவிடாத முயற்சி ஆகியவற்றைக் கொண்டது. அர்ஜூன் மைதானத்தில் அடியெடுத்து வைக்கும்போது கிரிக்கெட் பேட்டை மட்டும் எடுத்து செல்லவில்லை. ஒரு நாட்டின் எதிர்பார்ப்புகளையும் தனது சொந்த குடும்பத்தின் நம்பிக்கைகளையும் சுமந்து செல்கிறார். சர்வதேச சுழற்பந்து வீச்சாளரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான ஆர். அஸ்வின், அர்ஜுனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளார். 


அர்ஜுனுக்கு கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதையும் தாண்டி அது அவனது அடையாளம், குறிக்கோள் மற்றும் அவனது மிகப்பெரிய சவால். ஆனால் அவனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் இடையில் பிரச்சினைகள் வரும்போதுதான் அர்ஜூனுக்கு உண்மையான ‘டெஸ்ட்’ தொடங்குகிறது. 


தனது கதாபாத்திரத்தைப் பற்றி சித்தார்த் பேசுகையில், “அர்ஜுனின் கதை முழுக்க முழுக்க ஆர்வம் மற்றும் தியாகத்தைக் கொண்டது. அவன் தனக்காக மட்டும் விளையாடவில்லை. அவன் தனது  நாட்டிற்காகவும், விளையாட்டின் மீது கொண்ட காதலுக்காகவும், அவனது கனவுகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான போராட்டத்தையும் சுமந்துதான் விளையாடுகிறான். ’டெஸ்ட்’ என்பது ஒரு ஸ்போர்ட்ஸ் படம் மட்டுமல்ல. இது நமது தேர்வுகள் பற்றியும் நமக்கே தெளிவுபடுத்துகிறது. இந்தப் படத்தை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் பார்ப்பதற்காக நான் காத்திருக்கிறேன்” என்றார். 


அர்ஜுனின் விளையாட்டு மீதான காதல் அவரது தேர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இதுபற்றி மேலும் அறிய ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ’டெஸ்ட்’ திரைப்படம் பாருங்கள்.


*நடிகர்கள்:* ஆர். மாதவன், மீரா ஜாஸ்மின், நயன்தாரா, சித்தார்த்


*தொழில்நுட்பக் குழு:*


எழுத்து, இயக்கம்: எஸ். சஷிகாந்த்,

தயாரிப்பாளர்: சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் (YNOT ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்)

*நெட்ஃபிலிக்ஸ் பற்றி:*


நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

No comments:

Post a Comment