Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Saturday, 15 March 2025

ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படமான 'டாக்ஸிக் : ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்'

 *'ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படமான 'டாக்ஸிக் : ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' படத்தை பாராட்டிய ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே ஃபெர்ரி*



''யாஷின் டாக்ஸிக் திரைப்படம்- இது ஒரு பேங்கர்'' என ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெர்ரி பாராட்டு தெரிவித்திருக்கிறார். 


ஹாலிவுட் திரைப்படங்களில் அதிரடி காட்டிய இயக்குநர் இந்திய சினிமாவில் இணைந்திருக்கிறார். உலகளாவிய பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் துணிச்சல் மிக்க - துடிப்பான அதிரடியான ஆக்சன் காட்சிகளை வடிவமைப்பதில் புகழ்பெற்றவர் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெர்ரி. இவர் 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக் : ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்- அப்ஸ்' படக் குழுவினருடன் இணைந்துள்ளார்.  இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார். அத்துடன் 'ராக்கிங் ஸ்டார்' யாஷுடன் இணைந்து தோன்றும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டு, 'இவருடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன்' என பதிவிட்டிருக்கிறார். 


மேலும் அந்தப் பதிவில் ''#டாக்ஸிக் என பெயரிட்டு, தனது நண்பர் #யாஷ் உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவில் சிறப்பான வெற்றியை பெற்றேன். ஐரோப்பா முழுவதிலும் இருந்து என் அன்பான நண்பர்கள் பலருடன் பணியாற்ற முடிந்தது. இதை அனைவரும் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இது ஒரு அற்புதமான அனுபவம். நாங்கள் இணைந்து பணியாற்றியதில் மிகவும் பெருமை கொள்கிறோம்'' என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 


'கே ஜி எஃப் 'படத்திற்கு பின் சக்தி வாய்ந்தவராக மாறிய யாஷ்-  பெர்ரியின் பதிவிற்கு பிறகு தன்னுடைய எண்ணத்தை பகிர்ந்து கொண்டார்.  'இது ஒரு சினிமா காட்சியாக உருவாகி வருவதற்கு அதிக உற்சாகத்தை தூண்டியது' என்றும், '' என் நண்பரே உங்களுடன் இணைந்து நேரடியாக பணிபுரியும் போது உங்களின் ஆற்றலை அறிந்தேன்'' என்றும் பதிவிட்டிருக்கிறார். 


இந்திய சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை குறிக்கும் வகையில் உருவாகி வரும் 'டாக்ஸிக் ' திரைப்படம் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழியில் எழுதி, படமாக்கப்பட்ட பிரம்மாண்டமான பொருட்செலவிலான இந்திய திரைப்படமாகும். இந்த துணிச்சல் மிகுந்த படைப்பு.. இந்திய பார்வையாளர்களுக்கு ஒரு அசலான கதையை உறுதி செய்கிறது. அதே தருணத்தில் உலகளாவிய பார்வையாளர்களுக்கான அணுகுமுறையையும் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும், பல சர்வதேச மொழிகளிலும் டப்பிங் செய்யப்படவுள்ளது. இது உண்மையில் ஒரு பன்முகத் தன்மை வாய்ந்த கலாச்சார ரீதியிலான திரைப்பட அனுபவத்திற்கு வழி வகுக்கும். 


இந்த இலட்சிய படைப்பை சர்வதேச அளவில் பாராட்டினைப் பெற்ற இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கியுள்ளார். உணர்வுபூர்வமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற கீது மோகன் தாஸ் - சன்டான்ஸ் திரைப்பட விழாவில் தேசிய விருது மற்றும் உலகளாவிய திரைப்பட தயாரிப்பு விருது போன்ற மதிப்புமிக்க பாராட்டுகளை பெற்றுள்ளார். 'டாக்ஸிக்' படத்தின் மூலம் அவர் தன்னுடைய கலை பார்வையை ஹை ஆக்டேன் ஆக்சனுடன் இணைந்து தருகிறார். இதன் மூலம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத பயணத்திற்கும் அவர் உறுதியளிக்கிறார். 


கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் 'ராக்கிங் ஸ்டார்'‌ யாஷ் இணைந்து தயாரிக்கும் 'டாக்ஸிக்:  ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' எனும் திரைப்படம் மேற்கத்திய பாணியிலான துல்லியத்தையும், இந்திய தனத்தையும் தீவிரத்துடன் இணைந்து.. அதிரடி ஆக்சன் படத்தின் ஜானரை மறு வரையறை செய்வதற்கு தயாராக உள்ளது.

No comments:

Post a Comment