Featured post

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே'

 *Srigreen Productions M S Saravanan தயாரிப்பில்  உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உ...

Sunday, 30 March 2025

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும்

 *இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும், பான் இந்தியத் திரைப்படம் !!*



பூரி ஜெகன்நாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சார்மி கௌர்,பூரி கனெக்ட்ஸ் இணையும்,பான் இந்திய பிரம்மாண்டத் திரைப்படம்

ஜூனில்  படப்பிடிப்பு தொடக்கம்!!


பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் மரண மாஸ் காம்பினேஷனில், புதிதாக உருவாகவிருக்கும்,  புதிய படம், வித்தியாசமான களத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ளது.  கதாநாயகர்களை மாஸ் அவதாரத்தில், கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாக்கும், இயக்குநர் பூரி ஜெகன்நாத் கைவண்ணத்தில்,  விஜய் சேதுபதி இதுவரை பார்த்திராத கோணத்தில் இப்படத்தில் தோன்றவுள்ளார்.  இப்படம் ஒரு மிகப்பெரிய பான் இந்தியா திருவிழாவாக இருக்கும்.


இப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து, பூரி கனெக்ட்ஸ் பட நிறுவத்தின் கீழ், பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். இந்த அற்புதமான படம் இன்று உகாதி தினத்தன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்காக இயக்குநர்  பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை எழுதியுள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் பார்த்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் விஜய் சேதுபதியின் புதிய அடையாளத்தை திரையுலகிற்கு வெளிப்படுத்துவதாக இருக்கும்  எனக் கூறப்படுகிறது.


இந்த மாபெரும் கனவு திரைப்படத்தை அறிவிக்கும் வகையில், விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் புன்னகையுடன் இணைந்திருக்கும் அழகான  போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 


இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது.


நடிகர்கள் :

விஜய் சேதுபதி


தொழில்நுட்பக் குழு: 

எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்

தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் 

தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ் 

CEO : விசு ரெட்டி 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

No comments:

Post a Comment