Featured post

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே'

 *Srigreen Productions M S Saravanan தயாரிப்பில்  உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உ...

Wednesday, 26 March 2025

ஷிகான் ஹுசைனியின் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்

 *ஷிகான் ஹுசைனியின் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்*



உடல் நலக்குறைவால் சென்னையில் காலமான கராத்தே வீரரும் நடிகருமான ஷிகான் ஹுசைனியின் மறைவுக்கு தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், நடிகர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: 


கராத்தே வீரரும், வில்வித்தை வீரரும், இளைஞர்களுக்கு பல கலைகளை கற்றுத் தந்த கலைஞரும், திரையுலகில் நடிகராகவும் வலம் வந்தவருமான ஷிகான் ஹுசைனி அவர்களுடைய மறைவு மனதிற்கு அதிர்ச்சி அளிக்கிறது.


இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னுடைய உடல் உறுப்புகளை அவர் தானம் செய்திருப்பது உள்ளத்தை உருக்குகிறது, கண்களில் கண்ணீரை பெருக்குகிறது.


அவரை இழந்து வாடக்கூடிய அவருடைய இல்லத்தாருக்கும், கலையுலகத்தை சேர்ந்த ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


T.ராஜேந்தர், எம்.ஏ.

‍‍- தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், நடிகர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் 


***

No comments:

Post a Comment