SweetHeart Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம sweetheart படத்தோட review அ தான் பாக்க போறோம். Swineeth S. Sukumar தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு. இதுல Rio Raj , Gopika Ramesh Renji Panicker, Redin Kingsley, Arunachaleswaran Pa, Tulasi, Fouziee, Suresh Chakravarthy லாம் நடிச்சிருக்காங்க. இந்த படத்துக்கு music அ compose பண்ணது and produce பண்ணிருக்கறது yuvan shankar raja . இது இவரு produce பண்ணற நாலாவுது படம். ஏற்கனவே rio நடிச்சு வெளி வந்த ஜோ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அதுனால இந்த படத்துக்கும் நல்ல expectation இருந்தது னு சொல்லலாம். இந்த படத்தை premier show அ பாத்த பல சினி actors இந்த படத்தை புகழ்ந்து பேசிருக்காங்க. நடிகை ரம்பா பேசும் போது family sentiments base பண்ணின ஒரு அழகான படமா அமைச்சிருக்கு னு சொல்லிருக்காங்க. கண்டிப்பா எல்லா பெண்களுக்கும் இந்த படம் பிடிக்கும்னும் சொல்லிருக்காங்க. நடிகர் மணிகண்டன் பேசும்போது modern day ல இருக்கற relations அ பத்தி ரொம்ப அழகா காமிச்சிருக்காங்க. நடிச்சவங்கள இருந்து technical side வரையும் இந்த படத்துக்கு எல்லாமே strong அ அமைச்சிருக்கு னு சொல்லிருக்காரு.mime gopi பேசும் போது இந்த காலத்து youngsters க்கு ஒரு நல்ல கருத்தை சொல்ற மாதிரியும், இந்த காலகட்டதோட காதல் எப்படி இருக்கு ன்றதையும் காமிச்சிருக்காங்க னு சொல்லிருக்காரு.
Sweet Heart Movie Video REview: https://www.youtube.com/watch?v=SCzM57BblSE
celebrties கிட்ட இருந்து வந்த positive reviews அ பாத்தோம். சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். vasu அ நடிச்சிருக்க rio வும் manu வா நடிச்சிருக்க gopika ramesh யும் ஒரு complicated ஆனா relationship ல இருப்பாங்க. vasu க்கு ஒரு கஷ்டமான கதை இருக்கும். vasu ஓட அம்மா வேற ஒருத்தரோட இவங்கள விட்டுட்டு போய்டுவாங்க. இதுனால vasu ஓட அப்பா ஒரு குடிகாரரை மாறிடுவாரு. ஒரு கட்டத்துக்கு மேல அப்பாவை இழந்துடுறாரு rio . அதுனால காதல் நிரந்தரம் கிடையாது தனியாவே வாழ்ந்துட்டு வராரு. இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா manu ஓட family அப்படியே opposite இவங்க ரொம்ப supportive அ இருப்பாங்க. vasu வை சந்திக்கிற manu க்கு காதல் வருது. ஆனால் rio இவங்க love அ reject பண்ணறாங்க. இருந்தாலும் இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிக்கறாங்க. அப்புறமா மனு pregnant ஆயிடுறாங்க. கொழந்தையா வச்சுக்கலாம் னு மனு சொல்ல, கொழந்த வேண்டாம் கலச்சுடலாம் னு vasu சொல்லுறாரு. இதுக்கு அப்புறும் என்ன நடக்குது ன்றது தான் sweetheart படத்தோட மீதி கதையை இருக்கு.
இந்த கதை ரொம்ப simple அ தான் இருக்கும் ஆனா அதா execute பண்ண விதம் ரொம்ப அழகா இருந்தது. படத்தோட first half அ பாக்கும் போது நெறய comedy scenes அ வச்சிருக்காங்க. அப்படியே second half அ பாத்தீங்கன்னா கொஞ்சம் serious அ ஒரு நல்ல climax அ வச்சு தான் முடிச்சிருக்காங்க. climax தான் இந்த படத்தோட highlight னு சொல்லலாம், ஏன்னா அந்தளவுக்கு audience ஓட மனச வருடரா மாதிரி emotional அ கொண்டு வந்திருக்காங்க. படத்தோட last 40 minutes அ பாக்கும் போது எல்லாருக்கும் கண்டிப்பா அழகை வரும் ன்றத்துல எந்த சந்தேகமும் இல்ல. rio ஓட நடிப்பு jo படத்தை விட இதுல சிறப்பா இருந்தது னே சொல்லலாம். rio and gopika ஓட chemistry நல்ல இருந்தது. இவங்களோட romance அ இருக்கட்டும், இவங்களுக்கு நடுவுல நடக்கற வாக்குவாதம், சண்டை னு எல்லாமே super அ இருந்தது. அப்புறம் Renji Panicker, Thulasi இவங்களோட நடிப்பும் அருமையா இருந்தது.
dada , bachelor மாதிரி ஒரு good feel movie தான் இது. director swineeth ஓட கதை இந்த காலத்து youngsters க்கு பிடிக்கிற மாதிரி எடுத்துருக்கறது இன்னுமே super அ இருந்தது. இந்த படத்தோட இன்னொரு highlight ஆனா விஷயம் னா அது கண்டிப்பா yuvan shankar raja ஓட music and bgm தான். ஏன்னா romantic scenes அ இருக்கட்டும் emotional scenes அ இருக்கட்டும் , எல்லாத்துக்குமே perfect அ bgm அண்ட் songs அ குடுத்திருக்காரு.
ஒரு நல்ல simple ஆனா அதே சமயம் emotional ஆனா படம் தான். கண்டிப்பா இந்த படத்தை உங்க friends and family ஓட போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment